For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கண்டிப்பாக இந்த மாற்றங்கள் வேண்டும்..!! கே.எல்.ராகுலுக்கு ஆலோசனை கூறிய கம்பீர்..

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. இதில் இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுமே மோசமாக உள்ளது

இந்த நிலையில் ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. இதில் இந்திய அணி சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

கம்பீர் சொன்ன யோசனைகள் என்ன, அது பயன் தருமா என்பதை தற்போது காணலாம்.

405 ரன்கள் குவித்த இந்திய அணி.. U-19 உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்..!!405 ரன்கள் குவித்த இந்திய அணி.. U-19 உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்..!!

சொதப்பல்

சொதப்பல்

இந்திய அணியின் பந்துவீச்சு இந்த தொடரில் படு மோசமாக உள்ளது. பும்ராவை தவிர மற்ற வீரர்கள் விக்கெட்டு எடுக்க சிரமப்படுகின்றனர். இதனை பயன்படுத்தி கொண்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் எந்த நெருக்கடியும் இன்றி பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி கொண்டனர். கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் பார்ட்னர்ஷிப் கிடையாது, பந்துவீச்சாளர்களுக்கு இடையேயும் உண்டு

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

ஒரு முனையில் ஒரு பந்துவீச்சாளர் நெருக்கடியை ஏற்படுத்த, மறுமுனையில் அடுத்த பந்துவீச்சாளர் விக்கெட்டை வீழ்த்துவார். இப்படி தான் ஆண்டர்சன்- பிராடு, கும்ப்ளே-ஹர்பஜன் சிங் , குல்தீப் யாதவ்-சாஹல் ஜோடி விக்கெட்டுகளை எடுத்தனர். ஆனால் அப்படி ஒரு நிலை இப்போதைய அணியில் இல்லை

ஓய்வு அளியுங்கள்

ஓய்வு அளியுங்கள்

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு கம்பீர் அளித்த பேட்டியில், இந்திய அணியின் பந்துவீச்சில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார். பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்

மாற்றம் தேவை

மாற்றம் தேவை

அதற்கு பதிலாக முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, தீபக் சாஹர் மற்றும் ஜெயந்த் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்று கே.எல்.ராகுலுக்கு கம்பீர் யோசனை கூறியுள்ளார். பேட்டிங்கை பொறுத்தவரை மாற்றம் மேற்கொள்ள தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கம்பீரின் இந்த யோசனை நூற்றுக்கு நூறு சரியானது. தொடரை இழந்துவிட்டதால் இனி அச்சப்பட தேவையில்லை.

Story first published: Sunday, January 23, 2022, 19:21 [IST]
Other articles published on Jan 23, 2022
English summary
Ind vs SA 3rd odi Gautam gambhir advices 3 changes in to Indian team கண்டிப்பாக இந்த மாற்றங்கள் வேண்டும்..!! கே.எல்.ராகுலுக்கு ஆலோசனை கூறிய கம்பீர்..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X