For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதை செய்தால் போதும்..!! 8 விக்கெட்டுகளும் கிடைக்கும்..இந்தியாவின் வெற்றிக்கு சூப்பர் பிளான் ரெடி..!!

கேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் இன்று கிளைமேக்ஸை நெருங்கி வருகிறது

தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் நேற்று ஆக்சன் காட்சிகள் நிறைந்த நாளாக அமைந்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 111 ரன்கள் மட்டுமே தேவை

இந்தியாவின் வெற்றிக்கு 8 விக்கெட்டுகள் தேவை. பீட்டர்சென் களத்தில் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

ரிஷப் பண்ட் 'ஒன் மேன் ஷோ’..தென்னாப்பிரிக்காவுக்கு கடின இலக்கு நிர்ணயித்த இந்தியா.. வரலாறு படைக்குமா ரிஷப் பண்ட் 'ஒன் மேன் ஷோ’..தென்னாப்பிரிக்காவுக்கு கடின இலக்கு நிர்ணயித்த இந்தியா.. வரலாறு படைக்குமா

வெற்றி கடினம்

வெற்றி கடினம்

தென்னாப்பிரிக்காவுக்கு தான் வெற்றி என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ள நிலையில், இந்தியாவின் வெற்றி கொஞ்சம் கடினமாகிவிட்டது. ஆனால் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். 10 பந்துகளில் ஆட்டம் தலைக்கீழ் கூட மாற வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது காணலாம்

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

கடந்த டெஸ்டில் இந்திய தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஷாட் பிட்ச் பந்துகளாக வீசினர். அதாவது தலைக்கு பந்தை குறிவைத்தே வீசினர். இது தென்னாப்பிரிக்காவுக்கு எவ்வித சிக்கலையும், நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. இதனால், இன்றைய ஆட்டத்தில் தங்களது யுத்திகளை மாற்ற வேண்டும்.

புதிய பிளான்

புதிய பிளான்

அதாவது, இந்திய பந்துவீச்சாளர்கள் ஸ்டம்புகளை குறிவைத்து பந்துவீச வேண்டும். அப்படி பந்துவீசினால், அவர்கள் ரன் அடிக்க கடினமாக இருக்கும்.பந்தை அடிக்க தவறினால் எல்.பி.டபிள்யூ வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் இந்த யுத்தியை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்

Recommended Video

கடைசி வரை போராட்டம்.. சதம் அடித்து அசத்திய Rishabh Pant
8 விக்கெட்டுகள்

8 விக்கெட்டுகள்

இதே போன்று, OFF SIDE-ல் நான்கு அல்லது ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பந்துவீச வேண்டும். அதுவும் குட் லெங்தில் பந்து நன்கு பவுன்ஸ் ஆகும் படி வீச வேண்டும். இதை செய்தால் இந்திய அணி 8 விக்கெட்டுகளையும் எடுக்க வாய்ப்புள்ளது. இல்லை என்றாலும் தென்னாப்பிரிக்காவை திணற வைத்தோம் என்று வரலாறு பேசும். பீட்டர்சன், வெண்டர்டுசன், பெவுமா விக்கெட்டை எவ்வளவு சீக்கிரம் இந்தியா வீழ்த்துகிறதோ , அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும். இதே போன்று தென்னாப்பிரிக்காவின் பின் வரிசை வீரர்களுக்கு ஷாட் பால் வீசவே கூடாது.

Story first published: Friday, January 14, 2022, 12:36 [IST]
Other articles published on Jan 14, 2022
English summary
Ind vs SA 3rd Test – India bowling plan to take 8 Wickets இதை செய்தால் போதும்..!! 8 விக்கெட்டுகளும் கிடைக்கும்..இந்தியாவின் வெற்றிக்கு சூப்பர் பிளான் ரெடி..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X