தம்பி இந்த வேகம் பத்தாது..!! கடுப்பான கோலி.. !! காலை வாரிய வானிலை..- IND VS SA 3rd TEST

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி சற்று தடுமாறி வருகிறது. தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. கேப்டன் டீன் எல்கார் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்

“வேண்டுமென்றே செய்யாதீர்கள்”.. விராட் கோலி - கள நடுவர் இடையே சண்டை.. ஷமி தான் காரணம் - என்ன ஆனது! “வேண்டுமென்றே செய்யாதீர்கள்”.. விராட் கோலி - கள நடுவர் இடையே சண்டை.. ஷமி தான் காரணம் - என்ன ஆனது!

பும்ராவின் அதிர்ச்சி

பும்ராவின் அதிர்ச்சி

இதனையடுத்து, 17 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க தொடர்ந்தது. இன்றைய ஆட்டத்தின் 2வது பந்திலேயே பும்ரா வீசிய பந்தை சரியாக கணிக்க தவறியதால் ஏய்டன் மார்க்ரம் போல்ட் ஆனார். நைட் வாட்ச்மேனாக இருந்த கேஷவ் மகாராஜ், பொறுமையாக விளையாடி 25 ரன்கள் சேர்த்தார்

கோலிக்கு சோதனை

கோலிக்கு சோதனை

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த வெண்டர் டுசன் மற்றும் பீட்டசர்சன் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் அவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக இந்திய வீரர்கள் பந்துவீசினர். இதன் பலனாக பேட்டில் பந்து எட்ஜ் ஆகியும், சிலிப்பில் நிற்கும் ஃபில்டர்களுக்கு முன்பே பந்து தரையில் பட்டது. இது என்ன டா, நமக்கு வந்த சோதனை என்று விராட் கோலியும், பந்துவீச்சாளர்களும் கடுப்பாகினர்

என்ன காரணம்

என்ன காரணம்

நேற்றைய தினத்தை காட்டிலும் இன்று மேகமூட்டம் இல்லாமல் சூரியன் சுட்டெரித்தது. இதனால் ஆடுகளம் கொஞ்சம் தொய்வாக செயல்படுவதால், பேட்ஸ்மேன்களுக்கு ரன் குவிக்க ஏதுவாக இருக்கிறது. மேலும் பந்துவீச்சாளர்கள் 140 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசினால் மட்டுமே பேட் எட்ஜில் பட்டு, சில்ப்பில் நிற்கும் ஃபில்டர்கள் கைக்கு பந்து செல்லும். ஆனால் ஷர்துல் தாக்கூர் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதால் அவருக்கு விக்கெட் கிடைக்காமல் இருந்தது.

இது ஒன்னு போதும்.. வைரலாகும் Virat Kohli Photo
உமேஷ் யாதவ்

உமேஷ் யாதவ்

இதனை பயன்படுத்தி 4வது விக்கெட்டுக்கு பீட்டர்சன், வெண்டர்டுசன் ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து உமேஷ் யாதவை பந்துவீச விராட் கோலி அழைத்தார். அவர் வேகமாக பந்துவீச, வெண்டர் டுசன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் அரைசதம் கடந்தார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ind vs SA 3rd Test- SA Batsman frasturates the indian slip fielders தம்பி இந்த வேகம் பத்தாது..!! கடுப்பான கோலி.. !! காலை வாரிய வானிலை..- IND VS SA 3rd TEST
Story first published: Wednesday, January 12, 2022, 18:46 [IST]
Other articles published on Jan 12, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X