For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் விராட் கோலி.. அணியிலிருந்து நீக்கப்படுவது யார்.. ? ராகுல் சூசக தகவல்

ஜோஹன்ஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் செவ்வாய்கிழமை தொடங்குகிறது.

ஜோஹன்ஸ்பர்கில் காயம் காரணமாக களமிறங்காத விராட் கோலி, மூன்றாவது டெஸ்டில் விளையாட உள்ளார்

இதனால், 2வது டெஸ்டில் விளையாடிய எந்த வீரர், கடைசி டெஸ்டில் கழற்றிவிடப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிசயம், அற்புதம் நிகழ்ந்தால் வெற்றி..!! தோல்வியை நோக்கி செல்லும் இந்தியா..அதிசயம், அற்புதம் நிகழ்ந்தால் வெற்றி..!! தோல்வியை நோக்கி செல்லும் இந்தியா..

மாற்றங்கள் தேவை

மாற்றங்கள் தேவை

இந்திய அணியின் மோசமான பேட்டிங் காரணமாகவே தோல்வியை தழுவுகிறது. பந்துவீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தாலும், பேட்ஸ்மேன்கள் ரன் குவித்தால் தானே வெற்றி பெற முடியும். இதனால் பேட்டிங்கை வலுப்படுத்த இந்திய அணி சில மாற்றங்களை செய்ய வேண்டும்

தவறான தேர்வு

தவறான தேர்வு

வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள், 1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், 4 வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்ற முறையில் அணியை தேர்வு செய்கிறது. இதில் அஸ்வின், ஷர்துல் தாக்கூர் கூடுதலாக பின்வரிசையில் ரன் அடிப்பார்கள் என்ற முறையில் அணி தேர்வு நடைபெறுகிறது.

வெளியே செல்வது யார்?

வெளியே செல்வது யார்?

ஆனால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் , பேட்டிங்கை வலுப்படுத்துவதே சரியான அணி தேர்வாக இருக்கும். ஆனால், நேற்றைய போட்டியின் போது பேசிய கே.எல்.ராகுல், கடைசி டெஸ்டிலும் இந்திய அணி இதே கட்டமைப்புடன் தான் விளையாடும் என்று தெரிவித்தார். இதனால் விராட் கோலி அணிக்கு திரும்பினால் , ஒரு பேட்ஸ்மேனை தான் கழற்றிவிடுவார்கள் என்று உறுதியாகியுள்ளது

Recommended Video

Rahul Dravid opines on Rishabh Pant's shot selection, says management will have a chat
சீனியர்களுக்கு குறி?

சீனியர்களுக்கு குறி?

எனினும், அந்த கேள்விக்கும் கே.எல்.ராகுல் சூசகமாக பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்திய அணியின் அனுபவ வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் 2வது டெஸ்டில் அரைசதம் விளாசி, நல்ல உத்வேகத்துடன் இருப்பதாக கூறினார். இதனால கடைசி டெஸ்டில் இந்த சீனியர்கள் தான் இடம்பெறுவார்கள் என்று உறுதியாகியுள்ளது. இதனால், ஜோகனஸ்பர்க் டெஸ்டின் 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் விஹாரியை தான் இந்திய அணி கழற்றிவிடும் என்று தெளிவாகிறது.அப்படி நடந்தால் அது இந்திய அணி செய்யும் பெரிய தவறாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 7, 2022, 20:45 [IST]
Other articles published on Jan 7, 2022
English summary
Ind vs SA 3rd Test Who will give Place for Virat kohli 3வது டெஸ்ட்டில் களமிறங்கும் விராட் கோலி.. அணியிலிருந்து நீக்கப்படுவது யார்.. ? ராகுல் சூசக தகவல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X