பெங்களூரு: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்ட அணியும் தலா 2 போட்டியை வென்ற நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி தற்போது பெங்களூருவில் நடைபெற்றது.
போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்ற நிலையில், டாஸ் முதற்கொண்ட வீசப்பட்டு தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பெங்களூருவில் கன மழை பெய்தது. இதனால் ஆட்டம் மீண்டும் 7.50 மணிக்கு தொடங்கப்பட்டது. அப்போது இரு அணிகளுக்கும் ஒரு ஓவர்கள் குறைக்கப்பட்டு, 19 ஓவர் ஆட்டமாக நடைபெற்றது. இத்னையடுத்து இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர்.
இஷான் கிஷன், ருத்துராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தய அணி 3.3 ஓவரில் 28 ரன்களுக்கு 2 விக்கெட் என்று குறைக்கப்பட்டது. அப்போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. பெங்களூருவில் எவ்வளவு மழை பெய்தாலும், தண்ணீர் வெளியேற சிறப்பு வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.
தலைவலி புடிச்ச வேலைங்க.. நினைச்சது ஏதும் நடக்கல.. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வேதனை.. என்ன நடந்தது?
மழை நின்றால் 10 நிமிடத்தில் போட்டி நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முதலில் மழை நிற்க வேண்டும். இந்த நிலையில் நேரம் ஆக ஆக, போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படும். இரவு 10.12 மணிக்குள் போட்டி தொடங்கினால் 5 ஓவர்களாக போட்டி நடைபெறும்.
ஆனால் அப்போதும் போட்டி தொடங்க முடியவில்லை என்றால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். இதனால் இரு அணிகளும் தலா 2 போட்டியை வென்றுள்ளதால் தொடர் சமனில் முடிந்தததாக அறிவிக்கப்படும்.