இது சும்மா ட்ரைலர் தான்! பவுலிங்கில் தெறிக்கவிட்ட இந்திய ஜோடி.. மிரண்டு போன தென்னாப்பிரிக்கா!

IND VS SA 1ST TEST | ஆதிக்கம் செலுத்திய அஸ்வின் ஜடேஜா! மிரண்டு போன தென்னாப்பிரிக்கா!

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் 20 ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது.

பேட்டிங்கில் தெறிக்கவிட்ட இந்திய அணி, அடுத்து பந்துவீச்சிலும் மிரட்டலை துவக்கி உள்ளது.

சுழற் கூட்டணியான அஸ்வின் - ஜடேஜா இணைந்து மூன்று விக்கெட்கள் சாய்த்து தென்னாப்பிரிக்க அணியை திணற வைத்தனர்.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்க அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கியது.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

எனினும், இந்திய துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா - மாயங்க் அகர்வால் ஆதிக்கம் செலுத்தினர். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களால் இவர்களை பிரிக்க முடியவில்லை. இந்த ஜோடி 317 ரன்கள் சேர்த்தது.

ரோஹித், மாயங்க் சதம்

ரோஹித், மாயங்க் சதம்

துவக்க வீரராக தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ரோஹித் சர்மா 176 ரன்கள் குவித்தார். மறுபுறம், மாயங்க் அகர்வால் 215 ரன்கள் குவித்து தன் முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

இந்தியா 136 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இன்னும் மூன்று நாட்கள் மீதமிருக்கும் நிலையில், இரண்டாம் நாளின் கடைசி 20 ஓவர்களை ஆட வந்தது தென்னாப்பிரிக்க அணி.

அஸ்வின் - ஜடேஜா மிரட்டல்

அஸ்வின் - ஜடேஜா மிரட்டல்

இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா அனுபவ சுழற் பந்துவீச்சு கூட்டணி அட்டகாசமாக செயல்பட்டு மூன்று விக்கெட்களை எடுத்தது. அஸ்வின் பேட்ஸ்மேன்களான எய்டன் மார்கிரம் 5 மற்றும் ப்ரூன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஜடேஜா நைட் வாட்ச்மேனாக வந்த பீடிட் விக்கெட்டை சாய்த்தார்.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளம் எப்படி?

சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணம் ஆடுகளத்தின் தன்மை தான். முதல் நாள் பேட்டிங் செய்ய ஒத்துழைத்த ஆடுகளம், இரண்டாம் நாள் முதல் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி உள்ளது.

தென்னாப்பிரிக்கா நிலை

தென்னாப்பிரிக்கா நிலை

அடுத்த மூன்று நாட்களும் தென்னாப்பிரிக்க அணிக்கு சிக்கலாகவே அமையும். தென்னாப்பிரிக்க அணி பாலோ ஆன் பெறாமல் இருக்குமா? என்பதே முதல் கேள்வியாக உள்ளது. இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடினாலும், தென்னாப்பிரிக்க அணியால் சேஸிங் செய்து வெற்றி பெற முடியாது என்பதே விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.

மழை வரலாம்

மழை வரலாம்

மேலும், இந்தப் போட்டியில் அவ்வப்போது மழை வரலாம் என கூறப்படுகிறது. அதனால், ஆடுகளம் மேலும் மந்தமாக வாய்ப்புள்ளது. தென்னாப்பிரிக்கா தோல்வியை தவிர்க்குமா?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs SA : Ashwin, Jadeja picks 3 early wickets and pressurise SA. India scored 502/7 before declaring the first innings.
Story first published: Thursday, October 3, 2019, 20:08 [IST]
Other articles published on Oct 3, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X