For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு சான்ஸ் தராம உட்கார வைப்பீங்களா? இப்ப பேசுங்க.. தனி ஆளாக ரவுண்டு கட்டி வேட்டையாடிய அஸ்வின்!

Recommended Video

Ashwin took 7 wickets vs South Africa | 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்-வீடியோ

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் விக்கெட் வேட்டை நடத்தினார்.

டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று இருந்தாலும், சரியான வாய்ப்புகள் அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்படும் நிலையில், ஒரே இன்னிங்க்ஸில் விக்கெட் வேட்டை நடத்தி பதிலடி கொடுத்துள்ளார் அஸ்வின்.

சுளையா 87 லட்சம்.. ஓய்வை அறிவிக்க தயாராகும் இந்திய பந்துவீச்சாளர்.. அதிர வைக்கும் காரணம்!சுளையா 87 லட்சம்.. ஓய்வை அறிவிக்க தயாராகும் இந்திய பந்துவீச்சாளர்.. அதிர வைக்கும் காரணம்!

அஸ்வின் சிறப்பான பந்து வீச்சு

அஸ்வின் சிறப்பான பந்து வீச்சு

முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்க்ஸில் அஸ்வின் 7 விக்கெட்கள் வீழ்த்தி தனி ஆளாக தென்னாப்பிரிக்கா அணியை புரட்டி எடுத்தார். 46.2 ஓவர்களில் 145 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் அஸ்வின். இது அவரது ஐந்தாவது சிறந்த டெஸ்ட் பந்து வீச்சு ஆகும்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

முன்னதாக இந்தப் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் ஆடி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்தது. அத்துடன் டிக்ளர் செய்தார் கேப்டன் கோலி. தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் ஆடியது.

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

தென்னாப்பிரிக்கா பேட்டிங்

தென்னாப்பிரிக்க அணியின் முதல் 20 ஓவர்களில் அஸ்வின் 2 டாப் - ஆர்டர் வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தி அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தார். தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்கள் இழந்த பின் சுதாரித்து ஆடியது.

சதம் அடித்த இருவர்

சதம் அடித்த இருவர்

டீன் எல்கர் 160, டி காக் 111, பாப் டு ப்ளேசிஸ் 55 ரன்கள் குவித்தனர். தென்னாப்பிரிக்க அணி 131.2 ஓவர்களில் 431 ரன்கள் குவித்து, இந்திய அணியை விட 71 ரன்கள் மட்டுமே பின் தங்கி இருந்தது.

அஸ்வின் 7 விக்கெட்கள்

அஸ்வின் 7 விக்கெட்கள்

அஸ்வின் 7 விக்கெட்கள் வீழ்த்தி தனி ஆளாக தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தினார். ஜடேஜா 2, இஷாந்த் சர்மா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி வீசிய மொத்த ஓவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலாக அஸ்வின் மட்டுமே வீசினார்.

பதிலடி

பதிலடி

அஸ்வின் இந்த சிறப்பான பந்துவீச்சு மூலம் அவர் மீது நம்பிக்கை இன்றி, சரியான வாய்ப்பு வழங்காத இந்திய அணி நிர்வாகதிற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் என்றே பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்..

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்..

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அந்த தொடரில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்காமல் பெஞ்சில் அமர வைத்தார் கேப்டன் கோலி. இத்தனைக்கும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அஸ்வின் சிறப்பான பந்துவீச்சு பதிவை வைத்து இருந்தார்.

கவாஸ்கர் காட்டம்

கவாஸ்கர் காட்டம்

அஸ்வினுக்கு ஒரு தொடரில் வாய்ப்பு வழங்காமல் இருப்பதும், அடுத்த தொடரில் வாய்ப்பு வழங்குவதும் அஸ்வினின் தன்னம்பிக்கையை குலைக்கிறது என முன்னாள் வீரர் கவாஸ்கர் முதல் டெஸ்ட் போட்டியின் இடையே காட்டமாக கூறி இருந்தார்.

நிரூபித்த அஸ்வின்

நிரூபித்த அஸ்வின்

ஜடேஜாவும், அஸ்வினும் 40 ஓவர்களுக்கும் மேல் வீசினர். ஜடேஜா 2 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்திய நிலையில், அஸ்வின் 7 விக்கெட்கள் வீழ்த்தி தன் சிறப்பை வெளிப்படுத்தினார்.

இனிமேலாவது வாய்ப்பு கொடுங்க

இனிமேலாவது வாய்ப்பு கொடுங்க

இனியாவது அஸ்வினுக்கு தொடர்ந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு வீரருக்கு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு அளித்து, சில போட்டிகளில் வாய்ப்பு இல்லை என காரணமே இல்லாமல் அணியை மாற்றுவது வீரர்களின் மன உறுதியை பாதிக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Story first published: Saturday, October 5, 2019, 11:55 [IST]
Other articles published on Oct 5, 2019
English summary
IND vs SA : Ashwin took 7 wickets and gave a fitting reply to team management. He took 7 wickets against SA in first test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X