For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த 3 பேரை கட்டம் கட்டுவோம்.. டி20யில் இந்தியாவை வீழ்த்த தென்னாப்பிரிக்கா போட்ட பலே திட்டம்!

Recommended Video

குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா?

தரம்சாலா : இந்திய அணியின் ஒரே ஒரு பலவீனத்தை வைத்து டி20 தொடரில் வெற்றி பெற திட்டம் தீட்டி உள்ளது தென்னாப்பிரிக்கா அணி.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன முதல் டி20 போட்டி தரம்சாலாவில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கு முன் பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் உதவி பேட்டிங் பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர், இந்திய அணியின் பலவீனம் பற்றி குறிப்பிட்டார்.

IND vs SA : தில்லுக்கு துட்டு.. இனிமே இது தான் வழி.. மொத்தம் 9 பேட்ஸ்மேன்களை இறக்கும் கேப்டன் கோலிIND vs SA : தில்லுக்கு துட்டு.. இனிமே இது தான் வழி.. மொத்தம் 9 பேட்ஸ்மேன்களை இறக்கும் கேப்டன் கோலி

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள்

இந்திய அணியின் பலவீனம் என லான்ஸ் குளூஸ்னர் குறிப்பிட்டது வேகப் பந்துவீச்சாளர்களை தான். தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணியில் மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அந்த மூவர்

அந்த மூவர்

அவர்கள் தீபக் சாஹர், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அஹ்மது. இவர்கள் மூவருக்கும் சர்வதேச அனுபவம் குறைவு என்றாலும், மூவரும் ஐபிஎல் தொடரில் அசத்தலாக ஆடியதை அடுத்து இந்திய அணியில் வாய்ப்பு பெற்றனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இடம் பெற்றனர்.

பும்ரா, புவனேஸ்வர் எங்கே?

பும்ரா, புவனேஸ்வர் எங்கே?

அனுபவம் வாய்ந்த பும்ரா, புவனேஸ்வர் குமார் டி20 அணியில் இடம் பெறவில்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. புவனேஸ்வர் குமாருக்கு லேசான காயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய அணியின் திட்டம் என்ன?

இந்திய அணியின் திட்டம் என்ன?

இந்த நிலையில், இந்திய அணியில் பந்துவீச்சு திட்டத்தின் படி மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் (ஜடேஜா, க்ருனால் பண்டியா, வாஷிங்க்டன் சுந்தர்) மற்றும் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பண்டியா நிச்சயம் அணியில் இடம் பெறுவர்.

இந்த இருவர்

இந்த இருவர்

மூன்று முழு நேர வேகப் பந்து வீச்சாளர்களில் இருவர் அணியில் இடம் பெறுவர். முதல் டி20 போட்டியில் தீபக் சாஹர், நவ்தீப் சைனி இடம் பெறவே அதிக வாய்ப்பு உள்ளது.

பலவீனம் தான்

பலவீனம் தான்

அனுபவம் குறைந்த இந்த மூவரில் இருவர் மட்டுமே அணியில் இடம் பெற்றாலும், அது இந்திய அணிக்கு பலவீனமாக மாற வாய்ப்பு உள்ளது. இவர்கள் பதற்றத்தில் தவறு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

தென்னாப்பிரிக்கா திட்டம்

தென்னாப்பிரிக்கா திட்டம்

அதனால் தான் அவர்களை பலவீனம் என குறிப்பிட்டார் லான்ஸ் குளூஸ்னர். அவர் கூறுகையில், "இந்திய அணியை பார்க்கையில், அந்த ஒரு இடத்தை (வேகப் பந்துவீச்சு) தான் நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்" என்றார்.

இந்தியா சமாளிக்கும்

இந்தியா சமாளிக்கும்

எனினும், இந்திய அணி ஹர்திக் பண்டியா மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்கி தென்னாப்பிரிக்கா அணியை நிலைகுலைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் ஆகியோரும் அதிர்ச்சி அளிக்கக் கூடும்.

Story first published: Sunday, September 15, 2019, 12:18 [IST]
Other articles published on Sep 15, 2019
English summary
IND vs SA : Batting Coah Lance Klusner reveals plan for tackling Indian team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X