இந்திய அணிக்கு ஆப்படிக்க பயங்கர வேலை பார்த்த அறிமுக வீரர்.. ஒரே ஓவரில் 2 விக்கெட் எடுத்த ரகசியம்!

south africa won by 9 wickets| இந்திய அணி செய்த அந்த ஒரு தவறு! அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா

பெங்களூரு : ஜோர்ன் பார்ச்சூன் என்ற தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டார்.

இவர் இந்த தொடரில் தான் அறிமுகம் ஆனார். இந்த நிலையில், இந்திய அணியை வீழ்த்த அட்டகாசமான திட்டங்கள் போட்டு செயல்பட்டுள்ளார்.

அது குறித்த தகவல்கள் ஆதாரத்துடன் கிடைத்துள்ளது. அவர் ட்விட்டரில் கிடைத்த சில தகவல்களை சேகரித்து இந்திய அணிக்கு எதிராக தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியா படுதோல்வி

இந்தியா படுதோல்வி

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் ஜோர்ன் அபாரமாக செயல்பட்டு 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

மிடில் ஆர்டர் விக்கெட்கள்

மிடில் ஆர்டர் விக்கெட்கள்

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை ஒரே ஓவரில் வீழ்த்தினார் ஜோர்ன். இந்தியா 92 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது. அதன் பின் இந்தியா 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அறிமுக வீரர்

அறிமுக வீரர்

இந்திய அணியை மிடில் ஆர்டரில் தடுமாற வைத்தார் ஜோர்ன். இந்த டி20 தொடர் தான் அவரது அறிமுக டி20 தொடர் ஆகும். இரண்டு டி20 போட்டிகளில் ஆடிய அவர் 3 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

ஜடேஜா தான் காரணம்

ஜடேஜா தான் காரணம்

அவரது இந்த சிறப்பான செயல்பாடுகளுக்கு பின்னே இருப்பது இந்திய சுழற் பந்துவீச்சாளர் ஜடேஜா தான் என கருதப்படுகிறது. ஜடேஜாவின் பந்துவீச்சு வீடியோக்களை பார்த்து தான் ஜோர்ன் பயிற்சி எடுத்து இருப்பதாக ஒரு ஆதாரத்தை காட்டுகிறார் ஒரு ரசிகர்.

ட்விட்டர் குறிப்பு

ஜோர்ன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ட்விட்டரில் ஒரு கிரிக்கெட் ரசிகரின் பதிவுகளை தொடர்ந்து லைக் செய்துள்ளார். அதில் ஜோர்ன் இந்திய அணிக்கு எதிராக எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பது பற்றி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

யோசனைகள்

யோசனைகள்

அதில் முக்கியமாக ஒரு பதிவில், ஜடேஜாவின் பந்துவீச்சு வீடியோக்களை பாருங்கள், அவர் எப்படி விக்கெட் எடுக்கிறார், எந்த ஆங்கிளில் பந்து வீசுகிறார், எத்தனை வேகத்தில் வீசுகிறார், கிரீஸில் எங்கே இருந்து பந்து வீசுகிறார், எங்கே பீல்டிங் நிறுத்துகிறார் என பாருங்கள் பின் அவற்றை போட்டிகளில் பயன்படுத்திப் பாருங்கள் என கூறப்பட்டு இருக்கிறது.

பயங்கர வேலை

பயங்கர வேலை

இந்த பதிவுகள் செப்டம்பர் 3 அன்று பதிவிடப்பட்டு இருக்கிறது. அன்று இதை லைக் செய்துள்ள ஜோர்ன் நிச்சயம் இவற்றை பரிசோதித்து பார்த்து இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்திய வீரரை வைத்தே இந்திய அணியை திணற வைத்துள்ளார் ஜோர்ன்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs SA : South African spinner Bjorn Fortuin practiced well by watching Jadeja videos to beat India in T20 series.
Story first published: Monday, September 23, 2019, 20:23 [IST]
Other articles published on Sep 23, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X