For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட்டால் உலகின் பெஸ்ட் விக்கெட் கீப்பருக்கு நேர்ந்த கதி.. இந்திய அணியில் நடந்த கேலிக் கூத்து!

புனே : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வரும் இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா குறித்த ஆச்சரியமான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

அந்த புள்ளி விவரப்படி பார்த்தால் தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் அவர் தான்.

அப்படி என்றால் கடந்த ஓராண்டாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சாஹா காயம்

சாஹா காயம்

விரிதிமான் சாஹா தோனிக்கு பின் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக அணியில் சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். இடையே அவருக்கு காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சில காலம் அவர் டெஸ்ட் அணியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

ரிஷப் பண்ட் வந்தார்

ரிஷப் பண்ட் வந்தார்

தினேஷ் கார்த்திக், பார்த்திவ் பட்டேல் உள்ளிட்டோர் இடைப்பட்ட காலத்தில் வாய்ப்பு பெற்றனர். பின் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

இரண்டு சதம்

இரண்டு சதம்

அவர் தன் முதல் தொடரான இங்கிலாந்து தொடரில் ஒரு சதம் அடித்தார். முக்கியமான ஆஸ்திரேலிய தொடரில் ஒரு சதம் அடித்து அசத்தினார். அவரது விக்கெட் கீப்பிங்கில் சில குறைகள் இருந்தாலும் நல்ல பேட்ஸ்மேன் எனக் கூறி அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டது.

வெளியே அமர்ந்த சாஹா

வெளியே அமர்ந்த சாஹா

இதன் இடையே சாஹா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முதல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால், போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் வெளியே அமர வைக்கப்பட்டு, ரிஷப் பண்ட் தான் தொடர்ந்து களமிறங்கி வந்தார். இதன் இடையே சாஹா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முதல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால், போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் வெளியே அமர வைக்கப்பட்டு, ரிஷப் பண்ட் தான் தொடர்ந்து களமிறங்கி வந்தார்.

பார்ம் அவுட் ஆன பண்ட்

பார்ம் அவுட் ஆன பண்ட்

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்குப் பின் ரிஷப் பண்ட் பார்ம் அவுட் ஆனார். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் தவறுகள் செய்து வந்ததால், தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

உலகின் சிறந்த கீப்பர்

உலகின் சிறந்த கீப்பர்

சாஹா தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் களமிறங்க வாய்ப்பு பெற்ற நிலையில், அது பற்றி பேசிய கேப்டன் கோலி, சாஹா தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என ஒரேடியாக புகழ்ந்தார்.

புள்ளி விவரம் சொல்வது என்ன?

புள்ளி விவரம் சொல்வது என்ன?

அதை உண்மை என நிரூபிக்கும் புள்ளி விவரம் ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி 2017 முதல் வேகப் பந்துவீச்சாளர்கள் பந்துகளில் கேட்ச்சை நழுவ விடாமல் பிடித்தவர்கள் வரிசையில் சாஹா உலகிலேயே முதல் இடத்தில் இருக்கிறார்.

அதிக சதவீதம்

அதிக சதவீதம்

2017க்கு பின் குறைந்தது 10 கேட்ச் பிடித்த டெஸ்ட் விக்கெட் கீப்பர்கள் வரிசையில் 96.9 சதவீதம் கேட்ச்களை பிடித்து முதல் இடத்தில் இருக்கிறார் சாஹா. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இலங்கையின் டிக்வெல்லா - 95.5 சதவீதம், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ - 95.2 சதவீதம் உள்ளனர். பண்ட் 91.6 சதவீதத்துடன் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க தொடரில் அசத்தல்

தென்னாப்பிரிக்க தொடரில் அசத்தல்

தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் சாஹா பறந்து, பறந்து கேட்ச் பிடித்து ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். முதல் ஸ்லிப்புக்கு வரும் கேட்ச்சை கூட அவரே பிடித்து வியப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஏன் அணியில் சேர்க்கவில்லை?

ஏன் அணியில் சேர்க்கவில்லை?

சாஹா தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என ரிஷப் பண்ட்டை நீக்கிய பின் கூறும் கேப்டன், ஏன் சாஹா காயம் குணமாகி வந்த பின் பரிசோதனை முயற்சியாகக் கூட ஒரு போட்டியில் அவரை ஆட வைக்கவில்லை? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கோலி பதில் சொல்வாரா?

Story first published: Sunday, October 13, 2019, 13:22 [IST]
Other articles published on Oct 13, 2019
English summary
IND vs SA : Wriddhiman Saha is the best wicket keeper in the world but he doesn’t get chance earlier. This is the condition of the best wicket keeper in the world in Indian team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X