For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சும்மாவா.. தோனி சொல்லிக் கொடுத்து வளர்ந்தவராச்சே.. அணியில் முக்கிய இடத்தை பிடித்த சிஎஸ்கே வீரர்!

பெங்களூரு : இந்திய அணியில் முக்கிய நபராக மாறி இருக்கிறார் தீபக் சாஹர்.

ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று தன்னை பட்டை தீட்டிக் கொண்ட சாஹர் டி20 அணியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரு போட்டியிலும், தென்னாப்பிரிக்கா தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே ஆடி இருக்கும் அவர், அதற்குள் கேப்டன் கோலியை கவர்ந்து விட்டார்.

கேப்டன் கோலி! தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க!கேப்டன் கோலி! தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க!

ஐபிஎல் மாற்றம்

ஐபிஎல் மாற்றம்

2019 ஐபிஎல் தொடருக்கு முன் தீபக் சாஹர் இந்திய அணிக்காக ஒரீரு போட்டிகளில் ஆடி இருக்கிறார். ஆனால், அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த நிலையில், 2019 ஐபிஎல் தொடர் வரை முற்றிலுமாக மாற்றியது.

தோனியும், சிஎஸ்கேவும்

தோனியும், சிஎஸ்கேவும்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த ஐபிஎல் தொடரில் பல வெளிநாட்டு முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் தொடரில் இருந்து பல்வேறு காரணங்களால் விலகினர். அப்போது பவர்பிளே ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் பந்துவீச சிறந்த வேகப் பந்துவீச்சாளர் தேவை.

தோனி அறிவுரைகள்

தோனி அறிவுரைகள்

அப்போது தோனி தேர்வு செய்தவர் தான் தீபக் சாஹர். ஒரு குருவாக இருந்து தீபக் சாஹருக்கு சில நுணுக்கங்களை கற்றுத் தந்தார் தோனி. அது தீபக் சாஹரின் செயல்பாடுகளை மாற்றியது. சில அணுகுமுறைகளை மாற்றியது.

ஐபிஎல்-இல் கலக்கினார்

ஐபிஎல்-இல் கலக்கினார்

கடந்த 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசினார். கட்டுக் கோப்பாகவும், விக்கெட் வீழ்த்தும் வேகப் பந்துவீச்சாளராகவும் இருந்தார். சிஎஸ்கே அணி இறுதிப் போட்டி வரை முன்னேற முக்கிய காரணங்களில், தீபக் சாஹரும் ஒருவர்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

சிறந்த ஐபிஎல் செயல்பாடுகள் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பை பெற்றுத் தந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒரே ஒரு டி20 போட்டியில் ஆடிய சாஹர், வெறும் 4 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி, எல்லோரையும் மிரள வைத்தார்.

தென்னாப்பிரிக்கா டி20

தென்னாப்பிரிக்கா டி20

அடுத்து தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இடம் பெற்ற அவர் இரண்டாவது டி20 போட்டியில் 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். பவர்பிளே ஓவர்களிலும், இறுதி ஓவர்களிலும் பந்து வீச சரியான ஆள் இவர் தான் என கேப்டன் கோலி நினைக்கும் அளவுக்கு சாதித்துக் காட்டி விட்டார் தீபக்.

சிறப்பு என்ன?

சிறப்பு என்ன?

புதிய பந்திலும், பழைய பந்திலும் ஒரே மாதிரியான நீளத்தில் பந்து வீசுகிறார். மேலும், பேட்ஸ்மேன் கணிக்க முடியாத அளவுக்கு பந்துவீச்சு முறைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார். இதை குறிப்பிட்டு முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பாராட்டி வருகின்றனர்.

முக்கிய பந்துவீச்சாளர்

முக்கிய பந்துவீச்சாளர்

பும்ரா, ஷமி இல்லாத நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரில், இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் என்ற இடத்தை பெற்றுள்ளார். 3வது டி20 போட்டியிலும் தீபக் சாஹர் முக்கிய வீரராக அணியில் இருப்பார் என கருதப்படுகிறது.

Story first published: Sunday, September 22, 2019, 12:17 [IST]
Other articles published on Sep 22, 2019
English summary
IND vs SA : Deepak Chahar become a prime bowler for India in powerplay. He will be one of the key bowler in 3rd T20.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X