For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வைச்சு செஞ்சுட்டாங்க.. எல்லாமே தப்பு தப்பா நடக்குது.. கதறிய தென்னாப்பிரிக்கா கேப்டன் டு ப்ளேசிஸ்!

துபாய் : தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் விமான நிலையத்தில் இரவு முதல் காலை வரை புலம்பிய சம்பவம் நடந்தேறி உள்ளது.

முதலில் விமானம் கிளம்புவதில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டு புலம்பினார். அடுத்து தன் முக்கியமான பை தனக்கு வந்து சேரவில்லை என புலம்பினார்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் காரணம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தான். அவர்கள் செய்த குளறுபடிகளால் நொந்து போனார் பாப் டு ப்ளேசிஸ்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் 2 முதல் துவங்க உள்ளது. டி20 தொடர் தற்போது நடந்து வருகிறது, அதனால், பெரும்பாலான தென்னாப்பிரிக்கா வீரர்கள் இந்தியாவில் தான் உள்ளனர்.

இந்தியா கிளம்பினார்

இந்தியா கிளம்பினார்

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டிய மீதமுள்ள தென்னாப்பிரிக்க வீரர்களில், அந்த அணியின் கேப்டன் பாப் டு ப்ளேசிஸ்-உம் ஒருவர். அவர் நேற்று இரவு இந்தியாவுக்கு கிளம்பினார்.

விமானம் தாமதம்

விமானம் தாமதம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க இருந்தார் அவர். முதலில் துபாய் சென்று, பின் அங்கே இருந்து இந்தியா வர வேண்டும். துபாய்க்கு கிளம்ப வேண்டிய விமானம் நான்கு மணி நேரம் தாமதமாக கிளம்பி உள்ளது.

10 மணி நேரம் போச்சு

அப்போது கடும் கோபம் கொண்டு அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டார் டு ப்ளேசிஸ். தன் பதிவில் இந்த நான்கு மணி நேர தாமதத்தால், இந்தியாவுக்கு செல்ல வேண்டிய விமானத்தை தான் விட்டு விடுவேன் என்றும், அடுத்த விமானம் 10 மணி நேரம் கழித்து தான் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பையை காணோம்

பையை காணோம்

அடுத்து அவர் எடுத்துச் சென்ற கிரிக்கெட் பேட் வைத்து இருந்த பை, விமான நிலையத்தில் அவருக்கு வந்து சேரவில்லை. அதை சரி பார்த்து அவரிடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்தது. ஆனால், அவர்கள் பையை தவறவிட்டனர்.

எல்லாமே தவறு

அதனால், நீண்ட நேரம் காத்திருந்த டு ப்ளேசிஸ் நொந்து போய், தன் பையை காணவில்லை என ட்விட்டரில் மீண்டும் பதிவிட்டார். மேலும், இன்று என் மோசமான விமான அனுபவங்களில் ஒன்று. எல்லாமே தவறாக சென்றுவிட்டது. என் பேட் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன் எனக் கூறி புலம்பியும் இருந்தார்.

நிறுவனம் மெத்தனம்

நிறுவனம் மெத்தனம்

இதை அடுத்து ட்விட்டரில் அவருக்கு பதில் அளித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், அக்கறையே இல்லாமல் ஒரு பதிவை போட்டு, ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானது. தன் பதிவில், "உங்களுக்கு ஒரு கை வேண்டும் என்றால், எங்களுக்கு மெசேஜ் அனுப்புங்கள்" என கூறி இருந்தது.

ரசிகர்கள் கண்டிப்பு

இப்படி ஒரு பதில் கூறிய பின், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், ட்விட்டரில் இந்த பதிலை அளித்தவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும், உங்கள் கை வேண்டாம், அவரது பையை அவரிடம் ஒப்படையுங்கள் என்றும் ரசிகர்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை வறுத்தெடுத்தார்கள்.

கேப்டன் பதவி போச்சு

கேப்டன் பதவி போச்சு

உலகக்கோப்பை தொடரில் மோசமாக ஆடிய தென்னாப்பிரிக்கா அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. டி20 தொடருக்கு டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் கேப்டன் பதவியோடு தன் இடத்தையும் இழந்துள்ளார் டு ப்ளேசிஸ்.

ரொம்ப பாவம்

ரொம்ப பாவம்

டெஸ்ட் அணியில் மட்டுமே கேப்டனாக இருக்கிறார். அதுவும் நிரந்தரமா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் அவரை தன் பங்கிற்கு நோகடித்துள்ளது.

Story first published: Saturday, September 21, 2019, 17:53 [IST]
Other articles published on Sep 21, 2019
English summary
IND vs SA : Faf Du Plessis had his worst flying experience when coming to India. British Airways collapsed his travel plan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X