முடியலைடா சாமி! செம பல்பு.. ஆள் கூட்டிட்டு வந்த கேப்டன் டுபிளெசிஸ்.. அடக்க முடியாமல் சிரித்த கோலி!

ஆள் கூட்டிட்டு வந்த டுபிளெசிஸ்.. அடக்க முடியாமல் சிரித்த கோலி!

ராஞ்சி : தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பாப் டுபிளெசிஸ் டாஸ் போட ஆள் கூட்டி வந்து பல்பு வாங்கினார். அதைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்தார் இந்திய அணியின் கேப்டன் கோலி.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் துவங்கியது.

2 நாட்களாக மூடி மறைத்த இந்தியா.. இரவு நடந்த டிராமா.. உள்ளூர் வீரரை வைத்து கோலி போட்ட மாஸ் திட்டம்!

டாஸ் தோல்விகள்

டாஸ் தோல்விகள்

இந்தப் போட்டிக்கு முன்னதாக தன் டாஸ் தோல்விகள் குறித்து பேட்டிகளில் புலம்பி இருந்தார் பாப் டுபிளெசிஸ். கடந்த ஆறு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் டுபிளெசிஸ் டாஸ் தோற்று இருக்கிறார். அத்துடன் அந்தப் போட்டிகள் அனைத்திலும் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்துள்ளது.

ஒன்பது டாஸ் தோல்வி

ஒன்பது டாஸ் தோல்வி

மேலும், ஆசிய மண்ணில் ஒன்பது போட்டிகளில் டுபிளெசிஸ் டாஸ் தோற்று இருக்கிறார். ஆசிய மண்ணில் டாஸ் தோற்றால் டெஸ்ட் போட்டிகளில் வெல்வது கடினம். அதை நினைத்து தான் புலம்பி வந்தார் டுபிளெசிஸ்.

தொடரில் தோல்வி

தொடரில் தோல்வி

இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போடிட்களிலும் கூட டாஸில் தோற்ற தென்னாப்பிரிக்கா, முதலில் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. இந்தியா இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்து இமாலய ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

டாஸ் போட ஆள்

டாஸ் போட ஆள்

மூன்றாவது டெஸ்டில் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ற நிலையில், டுபிளெசிஸ் தனக்கு ராசி இல்லை என்பதால், டாஸ் போடும் போது தன் அணியில் இருந்து வேறு ஒரு நபரை அழைத்து வந்து டாஸ் போட முடிவு செய்தார்.

வந்தது யார்?

வந்தது யார்?

அதன் படி, மூன்றாவது டெஸ்டுக்கான டாஸ் போடும் நேரம் வந்தது. டுபிளெசிஸ் உடன் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டெம்பா பவுமா வந்தார். அவர் எப்படியும் டாஸ் ஜெயித்துக் கொடுப்பார் என நம்பினார் டுபிளெசிஸ்.

கோலி சுண்டினார்

கோலி சுண்டினார்

விராட் கோலி டாஸ் காயினை சுண்டி விட்டார். டெம்பா பவுமா "ஹெட்ஸ்" கேட்டார். ஆனால், "டெயில்ஸ்" விழுந்தது. இந்தியா டாஸ் வென்றது. வழக்கம் போல இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

வெறுப்பான டுபிளெசிஸ்

வெறுப்பான டுபிளெசிஸ்

ஆள் அழைத்து வந்தும் டாஸில் தோற்றதால் பெரும் ஏமாற்றம் அடைந்தார் தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டுபிளெசிஸ். அவர் பேசும் போது தன் டாஸ் போட மாற்று ஆள் திட்டம் வேலைக்கே ஆகவில்லை என்றார்.

கோலி சிரிப்பு

கோலி சிரிப்பு

இந்த சம்பவத்தில் உச்ககட்டம் கோலியின் அடக்க முடியாத சிரிப்பு தான். பவுமா டாஸில் தோற்ற உடன், கோலி அடக்க முடியாமல் சிரிக்கத் துவங்கினார். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் இந்த சம்பவத்தை பார்த்து சிரித்தனர்.

செம பல்பு

செம பல்பு

பாப் டுபிளெசிஸ் ஆள் கூட்டி வந்து டாஸில் பல்பு வாங்கிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வைரல் ஆகி வருகிறது. கோலிக்கும் டாஸ் ராசி இல்லாத நிலை கடந்த ஆண்டு இருந்தது. ஆனால், அவர் இது போன்ற முயற்சிகளை செய்யவில்லை.

இந்திய வீரர் அறிமுகம்

இந்திய அணியில் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு ஷாபாஸ் நதீம் என்ற சுழற் பந்துவீச்சாளர் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். அஸ்வின், ஜடேஜா, நதீம் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது இந்தியா.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs SA : Faf du Plessis used toss proxy and failed. Virat Kohli laughed after the toss proxy failed to win the toss.
Story first published: Saturday, October 19, 2019, 13:36 [IST]
Other articles published on Oct 19, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X