For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA : 2வது டி20யில் மிரட்டிய கோலி.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வென்றது இப்படித் தான்!

Recommended Video

INDIA VS SOUTH AFRICA 2ND T20 | INDIA WINS | இந்தியா வென்றது, தென்னாப்பிரிக்கா காலி!

மொஹாலி : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 149 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி மொஹாலியில் நடைபெற்றது.

டாஸ் முடிவு என்ன?

டாஸ் முடிவு என்ன?

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். புதிய கேப்டன் க்விண்டன் டி காக் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.

பரிசோதனை முயற்சிகள்

பரிசோதனை முயற்சிகள்

இந்திய அணி நீண்ட பேட்டிங் வரிசையோடு ஆடுவது என ஒரு புதிய திட்டத்தை வகுத்து நான்கு ஆல் - ரவுண்டர்களை களமிறக்கியது. தென்னாப்பிரிக்க அணியில் மூன்று அறிமுக வீரர்கள் களமிறங்கினர். ஆக, இரண்டு அணிகளுமே பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டன.

தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்

தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு டி காக், ஹென்ரிக்ஸ் துவக்கம் அளித்தனர். டி காக் நின்று அதிரடியாக ஆடினார். ஹென்ரிக்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ரன் குவித்த ஜோடி

ரன் குவித்த ஜோடி

அடுத்து ஜோடி சேர்ந்த பவுமா, டி காக் விரைவாக ரன் சேர்த்தனர். டி காக் 37 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து டஸ்ஸன் 1, மில்லர் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பவுமா சிறப்பான ஆட்டம்

பவுமா சிறப்பான ஆட்டம்

சிறப்பாக ஆடி வந்த பவுமா 49 ரன்கள் எடுத்து தீபக் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு ரன்னில் தன் முதல் போட்டியில் அரைசதத்தை தவறவிட்டார். கடைசி ஓவரில் ப்ரீடோரியஸ், பெஹ்ளுக்வாயோ தலா ஒரு சிக்ஸ் அடித்தனர்.

150 ரன்கள் வெற்றி இலக்கு

150 ரன்கள் வெற்றி இலக்கு

20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, தவான் துவக்கம் அளித்தனர்.

பண்ட் சொதப்பல்

பண்ட் சொதப்பல்

ரோஹித் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் 40 ரன்கள் சேர்த்து டேவிட் மில்லரின் நம்ப முடியாத கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் வழக்கம் போல மோசமான ஷாட் அடித்து 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

ஐந்தாம் வரிசையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், கோலிக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார். கோலி அரைசதம் கடந்த நிலையில், அபாரமாக ஆடினார். 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது இந்திய அணி.

கோலி சாதனை

கோலி சாதனை

கோலி 72 ரன்கள் அடித்து, ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்கள் அடித்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேலும், இந்தப் போட்டியில் 72 ரன்கள் சேர்த்த கோலி, ரோஹித் சர்மாவை முந்தி டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

Story first published: Thursday, September 19, 2019, 10:27 [IST]
Other articles published on Sep 19, 2019
English summary
IND vs SA : India vs South Africa 2nd T20 match report and highlights
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X