For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மரண அடி.. இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.. தென்னாப்பிரிக்காவை வைட்வாஷ் செய்தது இந்தியா!

Recommended Video

India vs south africa 3rd test | India beat South Africa by an innings and 202 runs

ராஞ்சி : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்க்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

மேலும் டெஸ்ட் தொடரை 3 - 0 என கைப்பற்றி வைட்வாஷ் செய்து சாதனை செய்தது இந்தியா. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியாவின் முதல் வைட்வாஷ் வெற்றி இது தான்.

முதல் இரண்டு போட்டிகளைக் காட்டிலும், இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி எந்த வகையிலும் போராடவில்லை. அதுவே மோசமான தோல்விக்கு முக்கிய காரணம்.

டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்டிங் செய்ய ரெடி - ரோஹித் ஷர்மாடெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்டிங் செய்ய ரெடி - ரோஹித் ஷர்மா

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து இருந்த போது கோலி டிக்ளர் செய்தார்.

ரோஹித் - ரஹானே அசத்தல்

ரோஹித் - ரஹானே அசத்தல்

ரோஹித் சர்மா 212 ரன்கள் அடித்து தன் முதல் இரட்டை சதம் கடந்தார். ரஹானே அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடி 115 ரன்கள் குவித்தார். ஜடேஜா மீண்டும் ஒரு பொறுப்பான ஆட்டம் ஆடி 51 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் கடைசி நேரத்தில் 10 பந்துகளில் 5 சிக்ஸ் அடித்து, 31 ரன்கள் குவித்து அசத்தினார்.

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு

தென்னாப்பிரிக்க அணி முதல் சில ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி இந்திய அணியை 39 ரன்களுக்கு 3 விக்கெட்கள் என்ற நிலைக்கு தள்ளியது. எனினும், அதன் பின் அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ரபாடா 3, லிண்டே 4, நோர்ஜே 1, பீடிட் 1 விக்கெட் வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா சொதப்பல்

தென்னாப்பிரிக்கா சொதப்பல்

அடுத்து முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா வரிசையாக விக்கெட்டை இழந்தது. ஹம்சா 62, பவுமா 32, லிண்டே 37 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா 162 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

பாலோ ஆன்

பாலோ ஆன்

335 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா பாலோ ஆன் கொடுத்தது. தென்னாப்பிரிக்கா தொடர்ந்து இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடியது. முதல் இன்னிங்க்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸில் மோசமாக ஆடியது அந்த அணி.

மீண்டும் சரிவு

மீண்டும் சரிவு

துவக்க வீரர் எல்கர் 16 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் பந்து வீச்சில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற நிலையில், அவருக்கு பதில் ப்ரூன் 12வது வீரராக அணியில் சேர்க்கப்பட்டார். அப்படி இருந்தும் தென்னாப்பிரிக்கா 133 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அதிகபட்சமாக லிண்டே 27 ரன்கள் எடுத்தார்.

இந்தியா பந்துவீச்சு அபாரம்

இந்தியா பந்துவீச்சு அபாரம்

இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. குறிப்பாக ஷமி - உமேஷ் யாதவ் விக்கெட் வேட்டை நடத்தினர். இந்தப் போட்டியில் இருவரும் தலா 5 விக்கெட்கள் வீழ்த்தினர். நதீம் 4, ஜடேஜா 3, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இன்னிங்க்ஸ் வெற்றி

இன்னிங்க்ஸ் வெற்றி

இந்தியா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று சாதித்துள்ளது இந்தியா. அதே போல டெஸ்ட் தொடரை 3 - 0 என கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக முதல் வைட்வாஷ் செய்தது.

சாதனைகள்

சாதனைகள்

இந்த தோல்வி தென்னாப்பிரிக்க அணியின் நான்காவது மோசமான தோல்வி ஆகும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பத்து போட்டிகளில் ஏழு வெற்றிகள் பெற்றுக் கொடுத்துள்ளார் கேப்டன் கோலி. மற்ற இந்திய கேப்டன்கள் 29 போட்டிகளில் ஏழு வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளனர்.

ஆட்டநாயகன் ரோஹித் சர்மா

ஆட்டநாயகன் ரோஹித் சர்மா

இந்தப் போட்டியில் 212 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் 529 ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

Story first published: Tuesday, October 22, 2019, 10:53 [IST]
Other articles published on Oct 22, 2019
English summary
IND vs SA : India vs South Africa 3rd test match result and highlights. India won by an innings and 202 runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X