For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவிடம் தர்ம அடி வாங்கும் தென்னாப்பிரிக்கா! காரணத்தை புட்டு புட்டு வைத்த ஜான்டி ரோட்ஸ்!

Recommended Video

Jonty Rhodes on South Africa loss | தென்னாப்பிரிக்கா தோல்வி!.. காரணத்தை கூறும் ஜான்டி ரோட்ஸ்!

மும்பை : தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்து வரும் நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது பற்றி தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் விலாவாரியாக கூறி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. டி20 தொடரில் 1 - 1 என சமன் செய்த அந்த அணி, முதல் டெஸ்டில் படு தோல்வி அடைந்தது.

பரிசோதனை முடிவால் வெற்றி

பரிசோதனை முடிவால் வெற்றி

தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற டி20 போட்டியிலும், கோலி எடுத்த பரிசோதனை முடிவு தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சேஸிங் செய்வது எளிது என்றாலும், அணிக்கு பயிற்சி அளிக்க வேண்டி கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதனால், இரண்டாவது டி20யில் தென்னாப்பிரிக்க அணி எளிதாக வென்றது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

அடுத்து நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோற்றது. இளம் வீரர்களுடன் வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற தடுமாறுகிறது என்றாலும் வேறு ஒரு முக்கிய பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார் ஜான்டி ரோட்ஸ்.

உலகக்கோப்பை முதல்..

உலகக்கோப்பை முதல்..

உலகக்கோப்பை தொடரில் இருந்தே தென்னாப்பிரிக்க அணி தடுமாறி வருகிறது. உலகக்கோப்பை தொடரில் படு மோசமாக தோற்றது அந்த அணி. அதன் பின் அணியின் அமைப்பு முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது.

சிறந்த வீரர்கள் ஓய்வு

சிறந்த வீரர்கள் ஓய்வு

உலகக்கோப்பை தொடருக்கு ஒரு வருடம் முன்பு அதிரடி வீரர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் ஆன ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். உலகக்கோப்பை தொடருக்குப் பின் மற்றொரு சிறந்த பேட்ஸ்மேன் ஹஷிம் ஆம்லா ஓய்வை அறிவித்தார்.

டேல் ஸ்டெய்ன் ஓய்வு

டேல் ஸ்டெய்ன் ஓய்வு

டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரை டி20 அணியில் சேர்க்கவில்லை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு. கேப்டன் பாப் டு ப்ளேசிஸ் டி20 அணியில் இருந்தே நீக்கப்பட்டார்.

டி20 அணியில் மாற்றம்

டி20 அணியில் மாற்றம்

டி20 அணியில் முற்றிலும் இளம் வீரர்கள் தான் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் அணியில் பாப் டு ப்ளேசிஸ் மற்றும் சில அனுபவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், அனுபவமில்லாத மற்றும் தற்காலிக பயிற்சியாளர்கள் ஆகியோரை மட்டுமே வைத்துக் கொண்டு இந்தியாவில் வெல்ல முடியாது என கூறி இருக்கிறார் ரோட்ஸ்.

ஒற்றுமை இல்லை

ஒற்றுமை இல்லை

ரோட்ஸ் கூறுகையில், "தென்னாப்பிரிக்க அணியில் ஒற்றுமை இல்லை என நான் கூறியதற்கு தென்னாப்பிரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியது. நான் சொல்ல வந்தது சீனியர் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களும் அணியில் இல்லை. இப்போதது இருப்பது தற்காலிக பயிற்சியாளர்கள் மட்டுமே என்றார்.

பலமான பின்னணி

பலமான பின்னணி

இந்தியாவில் செயல்பட வேண்டும் என்றால் பலமான பின்னணி அமைப்பு இருக்க வேண்டும். ஏனெனில், இது நீண்ட கடினமான சுற்றுப் பயணமாக இருக்கும். தென்னாப்பிரிக்கா இது வரை ஒரு டெஸ்ட் தொடரில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அனுபவம் இல்லை

அனுபவம் இல்லை

தென்னாப்பிரிக்க அணியில் அனுபவம் இல்லை என்பது இழப்பாக இருக்கும் என்பதோடு, புத்தம் புதிய நிர்வாக அணி வீரர்களை கையாள உள்ளது. இது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார் ஜான்டி ரோட்ஸ்.

இந்திய அணியின் பயிற்சியாளர்கள்

இந்திய அணியின் பயிற்சியாளர்கள்

அதே சமயம், இந்திய அணியின் அமைப்பு சிறப்பாக இருக்கிறது. பயிற்சியாளர் குழுவில் பலரையும் அவர்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளார்கள். அது அவர்கள் அணி சிறப்பாக செயல்பட உதவுகிறது என்று இந்திய அணியின் வெற்றி பற்றி கூறினார் ரோட்ஸ்.

Story first published: Wednesday, October 9, 2019, 9:48 [IST]
Other articles published on Oct 9, 2019
English summary
IND vs SA : Jonty Rhodes speaks about reason for South Africa team loss in India. He also mentioned reason for Indian team success.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X