For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரொம்ப நன்றிப்பா.. சிறப்பா பண்றீங்க! ரபாடாவை செமயாக வெறுப்பேற்றிய கோலி.. தெறிக்கவிடும் வைரல் வீடியோ!

Recommended Video

Virat Kohli makes fun of Rabada | ரபாடாவை செமயாக வெறுப்பேற்றிய கோலி | IND vs SA

புனே : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா பீல்டிங்கில் சொதப்பினார்.

அதனால், விராட் கோலிக்கு கூடுதலாக 4 ரன்கள் கிடைத்தது. ஓசி ரன் கிடைத்த குஷியில் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நன்றி சொல்லி சைகை காட்டி, வெறுப்பேற்றினார் விராட் கோலி. இந்த சம்பவம் இடம் பெற்ற வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஸ்டீவ் ஸ்மித்தை எட்டிப் பிடித்த கிங் கோலி.. பாண்டிங் சாதனை சமன்.. ஜஸ்ட் மிஸ் ஆன முக்கிய சாதனை!ஸ்டீவ் ஸ்மித்தை எட்டிப் பிடித்த கிங் கோலி.. பாண்டிங் சாதனை சமன்.. ஜஸ்ட் மிஸ் ஆன முக்கிய சாதனை!

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன முதல் டெஸ்டில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 400 ரன்களை கடந்து இந்தியா பேட்டிங் செய்து வருவதால், முதல் போட்டி போலவே தென்னாப்பிரிக்காவுக்கு சிக்கல் துவங்கி உள்ளது.

மயங்க், புஜாரா அசத்தல்

மயங்க், புஜாரா அசத்தல்

இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸில் ரோஹித் 14 ரன்களில் வெளியேறினார். மயங்க் அகர்வால், புஜாரா அபாரமாக ஆடினர். மயங்க் அகர்வால் 108 ரன்களும், புஜாரா 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கோலி - ரஹானே கூட்டணி

கோலி - ரஹானே கூட்டணி

அடுத்து ஜோடி சேர்ந்த கோலி - ரஹானே கூட்டணி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி 150 ரன்களை தாண்டி குவித்து தென்னாப்பிரிக்காவை திணற வைத்தது.

அந்த ஓவர்

அந்த ஓவர்

இந்த ஜோடி பேட்டிங் செய்து வந்த போது 66வது ஓவரில் அந்த மோசமான பீல்டிங் சம்பவம் அரங்கேறியது. அந்த ஓவரை கேஷவ் மகாராஜ் வீசினார். கோலி 4 வது பந்தை சந்தித்தார்.

ஒரு ரன் ஓடினார்

ஒரு ரன் ஓடினார்

கோலி பந்தை வலது பக்க பாயின்ட் திசையில் அடித்தார். வேகமாக ஒரு ரன் ஓடுமாறு ரஹானேவை அழைத்தார் கோலி. அப்போது பந்தை தடுத்து கையில் எடுத்தார் ரபாடா.

ரன் அவுட் முயற்சி

ரன் அவுட் முயற்சி

ஸ்ட்ரைக்கர் திசையை நோக்கி பந்தை வேகமாக எறிந்து ரன் அவுட் செய்ய முயற்சி செய்தார் அவர். ஆனால், அவர் வீசிய போது பந்து திசை மாறி சென்றது. அந்த இடத்தில் பீல்டர்கள் இல்லாத காரணத்தால் பந்து பவுண்டரி சென்றது.

ஓசியில் 4 ரன்கள்

ஓசியில் 4 ரன்கள்

தென்னாப்பிரிக்காவின் மோசமான பீல்டிங்கால் இந்தியாவுக்கும், விராட் கோலிக்கும் கூடுதலாக 4 ரன்கள் கிடைத்தது. அதனால், கோலி மகிழ்ச்சி அடைந்தார். 47 பந்தில் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவருக்கு கூடுதலாக 4 ரன்கள் கிடைத்தது.

கட்டை விரல் உயர்த்தி..

கட்டை விரல் உயர்த்தி..

அதை கொண்டாடும் வகையிலும், தென்னாப்பிரிக்க அணி தனக்கு ஓசியில் ரன்கள் கொடுத்ததை கேலி செய்யும் வகையிலும் கட்டை விரலை உயர்த்தி எல்லா திசைகளிலும் காட்டி நன்றி கூறினார் கோலி.

ரபாடா - கோலி மோதல்

ரபாடா - விராட் கோலி இடையே அடிக்கடி களத்தில் மோதல் ஏற்படுவது உண்டு. இந்த நிலையில், ரபாடா செய்த மோசமான பீல்டிங்கை குத்திக் காட்டி கூட கோலி வெறுப்பேற்றி இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

கோலி 26வது சதம்

இந்தப் போட்டியில் கோலி தன் 26வது டெஸ்ட் சதம் கடந்து அசத்தினார். இது 2019ஆம் ஆண்டில் அவர் அடிக்கும் முதல் சதம். மேலும், சென்சுரி மன்னனான அவர் கடந்த 11 இன்னிங்க்ஸ்களில் அடிக்கும் முதல் சதம் இது தான்.

Story first published: Friday, October 11, 2019, 14:15 [IST]
Other articles published on Oct 11, 2019
English summary
IND vs SA : Kohli hilarious reaction to Rabada misfield is going viral. Kohli got 4 extra runs because of that misfield.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X