For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தெரிந்தே மண்ணை வாரி போட்டுக் கொண்ட இந்திய அணி.. கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Recommended Video

south africa won by 9 wickets| இந்திய அணி செய்த அந்த ஒரு தவறு! அசத்தலாக வென்ற தென் ஆப்ரிக்கா

3வது டி20யில் கோலி எடுத்த பகீர் முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பெங்களூரு : மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

அது இந்திய அணியையும் கடுமையாக பாதித்தது. தெரிந்தே தவறான முடிவு எடுத்து சொதப்பினார் கோலி. 15 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்தது.

அதைக் கண்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தொடரில் முக்கியமான போட்டியில் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தார் என் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

IND vs SA : தைரியமான கேப்டன் கோலி.. மீண்டும் சொதப்பிய ரோஹித்.. தவான் மிரட்டல் அடி. என்ன ஆச்சு?IND vs SA : தைரியமான கேப்டன் கோலி.. மீண்டும் சொதப்பிய ரோஹித்.. தவான் மிரட்டல் அடி. என்ன ஆச்சு?

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன மூன்றாவது டி20 போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை 2 - 0 என கைப்பற்றலாம் என்பதால் இந்தியா எந்த பரிசோதனை முயற்சியும் எடுக்காது என கருதப்பட்டது.

கவாஸ்கர் பிட்ச் ரிப்போர்ட்

கவாஸ்கர் பிட்ச் ரிப்போர்ட்

மூன்றாவது டி20 போட்டி நடைபெறும் பெங்களூரு மைதான பிட்ச் ரிப்போர்ட் பற்றி கவாஸ்கர் கூறுகையில், பிட்ச் காய்ந்து போய் உள்ளது. வெடிப்புகள் உள்ளன. அதனால், சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இது நல்ல சேஸிங் மைதானம், என்பதால், முதலில் பந்து வீச வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும் என்றார்.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

ஆனால், டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதைக் கண்டு பலரும் அதிர்ந்து போயினர். சேஸிங் மைதானத்தில் டாஸ் வென்றும், ஏன் பேட்டிங் தேர்வு செய்தார் என விமர்சனம் உடனே எழுந்தது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஆனால், கோலி ஏன் எந்த முடிவை எடுத்தேன் என விளக்கம் அளித்தார். "இது சேஸிங் மைதானம் என தெரியும். ஐபிஎல்-இல் கூட இது சேஸிங் மைதானம் தான். டி20 உலகக்கோப்பையை நோக்கி நகர்வதால், சில இடங்களை நாங்கள் முன்னேற்ற நினைக்கிறோம்."

வீரர்களுக்கு பயிற்சி

வீரர்களுக்கு பயிற்சி

"நாங்கள் நல்ல சேஸிங் அணி. அதே சமயம், முதலில் பேட்டிங் செய்வதை நாங்கள் எதிர்பார்த்து இருக்கிறோம். உலகக்கோப்பை வருகிறது. டாஸ் முடிவு நம் கையில் இல்லை. அதனால், சில திட்டங்கள் வைத்து இருக்கிறோம். அதை செயல்படுத்தி பார்க்கப் போகிறோம்" என்றார்.

கோலியின் தைரியம்

கோலியின் தைரியம்

வீரர்களுக்கு சேஸிங் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்ய பயிற்சி அளிப்பதே கோலியின் திட்டம். அதே சமயம், இதற்கு முன் எந்த இந்திய கேப்டனும் பெங்களூரு மைதானத்தில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததில்லை. ஆனால், தைரியமாக பேட்டிங் தேர்வு செய்தார் கோலி.

தில் முடிவு

தில் முடிவு

கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் கோலியின் முடிவை கண்டு வாயை பிளந்தனர். பலரும் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். ஹர்ஷா போக்லே கூறுகையில், சேஸிங் மைதானம், இரண்டாம் பாதியில் காற்றில் ஈரத்தன்மை இருக்கும், இருந்தாலும் கோலி பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளார் என குறிப்பிட்டார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

கோலி இந்த முடிவை எடுத்தது முதலில் நல்ல முடிவு போல இருந்தாலும், போட்டியில் இந்தியா விரைவில் விக்கெட்களை இழந்தது. 15 ஓவர்களில் 6 விக்கெட்கள் வீழ்ந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கோலியின் முடிவை விமர்சித்து வருகிறார்கள்.

இந்திய அணி

இந்திய அணி

இந்தியா அணி விவரம் - ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி

தென்னாப்பிரிக்கா அணி

தென்னாப்பிரிக்கா அணி

தென்னாப்பிரிக்கா அணி விவரம் - க்விண்டன் டி காக் (கேப்டன்), ரீசா ஹென்ரிக்ஸ், டெம்பா பவுமா, ரஸ்ஸி வான் டர் டஸ்ஸன், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்ளுக்வாயோ, டிவைன் ப்ரீடோரியஸ், ஜோர்ன் பார்ட்யூன், காகிசோ ரபாடா, ஷம்சி, பேரான் ஹென்ரிக்ஸ்.

Story first published: Sunday, September 22, 2019, 20:34 [IST]
Other articles published on Sep 22, 2019
English summary
IND vs SA : Kohli shocks everyone as he chose to bat first in a chasing ground at bengaluru. Fans appreciate his brave decision which allows young players to experience the pressure.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X