For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலியின் மிரள வைக்கும் திட்டம்.. புஜாரா அங்க நின்னா.. இங்க விக்கெட் விழும்.. சான்ஸே இல்லை!

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முக்கிய டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆன டெம்பா பவுமா விக்கெட்டை திட்டம் போட்டு வீழ்த்தினார் கேப்டன் கோலி.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 395 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வருகிறது.

இலக்கை எட்ட முடியாவிட்டாலும் டிராவாவது செய்ய வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் ஆடியது அந்த அணி.

தென்னாப்பிரிக்கா நிலை

தென்னாப்பிரிக்கா நிலை

முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 502 ரன்களும், தென்னாப்பிரிக்கா 431 ரன்களும் குவித்தன. இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸில் 323 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது.

இந்தியா திட்டம்

இந்தியா திட்டம்

இந்திய அணிக்கு நான்காம் நாள் இறுதியில் சில ஓவர்களும், ஐந்தாம் நாள் முழுவதும் கையில் இருந்ததால் தென்னாப்பிரிக்க அணியை எளிதாக வீழ்த்தலாம் என திட்டமிட்டு இருந்தது. நான்காம் நாள் இறுதியில் ஒரு விக்கெட் வீழ்த்தியது.

8 விக்கெட்கள் தேவை

8 விக்கெட்கள் தேவை

ஐந்தாம் நாள் துவக்கத்தில், இரண்டாவது ஓவரிலேயே அஸ்வின் ஒரு விக்கெட் எடுக்க, தென்னாப்பிரிக்கா அணி தடுமாறத் துவங்கியது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 8 விக்கெட்கள் தான் தேவை.

புஜாரா பீல்டிங்

புஜாரா பீல்டிங்

அப்போது புஜாராவை டீப் ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி எல்லை அருகே பீல்டிங் நிற்க வைத்தார் கோலி. அதன் காரணம் அப்போது புரியவில்லை. அடுத்த சில பந்துகளில் அதற்கு பலன் கிடைத்தது.

பவுமா பேட்டிங்

பவுமா பேட்டிங்

தென்னாப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் பவுமா அப்போது தான் களமிறங்கி இருந்தார். அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதால் அவரை விரைவாக வீழ்த்த வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஷமி ஓவரில் விக்கெட்

ஷமி ஓவரில் விக்கெட்

12வது ஓவரில் பவுமா பேட்டிங் செய்து வந்தார். ஷமி அந்த ஓவரை வீசினார். பவுமா தான் சந்தித்த இரண்டாவது பந்தில், பவுல்டு அவுட் ஆகி ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் பின்னணியில் புஜாரா - ஷமி இருவருமே உள்ளனர்.

பின்னணி என்ன?

பின்னணி என்ன?

புஜாரா பீல்டிங் நின்ற திசையில் பந்தை அடிக்க முடியாது என்பதால் நேராக வரும் பந்துகளை அடிக்க முடியாமல், பின் காலில் நின்று தடுத்து ஆட முடிவு செய்தார் பவுமா. பந்து பவுன்ஸ் ஆகும் என நினைத்த அவர், பேட்டை உயர்த்திப் பிடித்து இருந்தார். ஆனால், பந்து பவுன்ஸ் ஆகவில்லை.

கோலி கொண்டாட்டம்

கோலி கொண்டாட்டம்

ஷமி பந்தை பவுன்ஸ் ஆகாமல் வீசினார். அதை எதிர்பார்க்காமல், அடித்து ஆடவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் ஆட்டமிழந்தார் பவுமா. தன் திட்டம் சரியாக வேலை செய்ததை கண்ட கோலி, விக்கெட் வீழ்ச்சியை டான்ஸ் ஆடி கொண்டாடினார்.

தடுமாறிய தென்னாப்பிரிக்கா

தடுமாறிய தென்னாப்பிரிக்கா

அதன் பின் தென்னாப்பிரிக்க இந்தப் போட்டியில் தடுமாறியது. ஷமி மூன்று முக்கிய விக்கெட்களையும் பவுல்டு அவுட் முறையில் எடுத்து மிரட்டினார். ஜடேஜா ஒரே ஓவரில் மூன்று விக்கெட்கள் வீழ்த்த, தென்னாப்பிரிக்க அணி 70 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது.

அஸ்வின் அபாரம்

அஸ்வின் அபாரம்

அஸ்வின் இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சேர்த்து எட்டு விக்கெட்கள் வீழ்த்திய போது முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்தார், இருவரும் 66 போட்டிகளில் 350 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தும் விரைவாக 350 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளனர்.

Story first published: Sunday, October 6, 2019, 15:56 [IST]
Other articles published on Oct 6, 2019
English summary
IND vs SA : Kohli used Pujara to take the wicket of Tempa Bavuma. Shami bowled out him with low bounce.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X