செம ரெக்கார்டு.. அஸ்வினை தவிர எல்லோரும் காலி.. ஜாம்பவான்களை அசால்ட்டாக ஓரங்கட்டிய ஜடேஜா!

Ravindra Jadeja races to 200 Test wickets | 200 டெஸ்ட் விக்கெட்டுகளை எட்டினார் ஜடேஜா

விசாகப்பட்டினம்: இந்திய சுழற் பந்துவீச்சாளர் ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்கள் வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டினார்.

இந்த மைல்கல்லை எட்டியதோடு சில முக்கிய சாதனைகளையும் நிகழ்த்தி, உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர்களில் நானும் இருக்கிறேன் என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

இரண்டு சாதனை

இரண்டு சாதனை

இந்திய அளவில் விரைவாக 200 விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியல் மற்றும் இடது கை பந்துவீச்சாளர்களில் விரைவாக 200 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியல் என இரண்டு முக்கிய பட்டியலில் பல ஜாம்பவான்களை முந்தினார் ஜடேஜா.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்தது.

மீண்டது தென்னாப்பிரிக்கா

மீண்டது தென்னாப்பிரிக்கா

அடுத்து ஆட வந்த தென்னாப்பிரிக்க அணி முதலில் 63 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தடுமாறியது. எனினும், பின்னர் சரிவில் இருந்து மீண்டது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 385 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து இருந்தது.

ஜடேஜா 2 விக்கெட்கள்

ஜடேஜா 2 விக்கெட்கள்

அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்தினார், ஜடேஜா 2 விக்கெட்கள் வீழ்த்தி தன் 200வது டெஸ்ட் விக்கெட்டை எட்டினார். ஜடேஜா அதி வேகமாக 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டு முக்கிய சாதனைகளை செய்தார்.

உலக அளவில் முதல் இடம்

உலக அளவில் முதல் இடம்

உலக அளவில் இடது கை வேகப் பந்துவீச்சாளர்களில் அதி விரைவாக 200 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் எல்லோரையும் முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார் ஜடேஜா. 44 டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா 200 விக்கெட்கள் வீழ்த்தி இந்த சாதனையை செய்துள்ளார்.

அடுத்த இடங்களில்..

அடுத்த இடங்களில்..

ரங்கனா ஹெராத் (47 போட்டிகள்), மிட்செல் ஜான்சன் (49 போட்டிகள்), மிட்செல் ஸ்டார்க் (50 போட்டிகள்), வாசிம் அக்ரம் (51 போட்டிகள்) என பல முன்னணி இடது கை பந்துவீச்சாளர்களை முந்தி இருக்கிறார் ஜடேஜா.

இந்திய அளவில் இரண்டாம் இடம்

இந்திய அளவில் இரண்டாம் இடம்

மேலும், இந்திய அளவில் விரைவாக 200 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வினுக்கு, அடுத்த இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். அஸ்வின் 37 போட்டிகளில் 200 விக்கெட்கள் வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார்.

ஹர்பஜன், கும்ப்ளே நிலை

ஹர்பஜன், கும்ப்ளே நிலை

ஜடேஜா இரண்டாம் இடத்தில் இருக்கும் நிலையில், அடுத்த மூன்று இடங்களில், ஹர்பஜன் சிங் (46 போட்டிகள்), அனில் கும்ப்ளே (47 போட்டிகள்), சந்திரசேகர் (48 போட்டிகள்) உள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs SA : Ravindra Jadeja reached 200 test wickets and breaks into two records. He is only second to Ashwin in the list of fastest Indian to reach 200 test wickets.
Story first published: Friday, October 4, 2019, 20:12 [IST]
Other articles published on Oct 4, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X