For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் கோலி! தயவுசெய்து அந்த சூப்பர் வீரரை 4ஆம் வரிசையில் இறக்கி விடுங்க.. ரிஷப் பண்ட்டை மாத்துங்க!

Recommended Video

Rishabh pant| கேப்டன் கோலி! தயவுசெய்து ரிஷப் பண்ட் இடத்தை மாத்துங்க!

பெங்களூரு : இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

குறிப்பாக, ரிஷப் பண்ட்டுக்கு முக்கியத்துவம் அளித்து நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பாமல், ஏற்கனவே சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என காரணத்தோடு கூறி வருகின்றனர்.

நான்காம் வரிசை சிக்கல்

நான்காம் வரிசை சிக்கல்

இந்திய அணியில் நீண்ட காலமாக நான்காம் வரிசையில் யார் பேட்டிங் செய்வது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. அந்த இடத்துக்கு யாரும் சரியாக பொருந்தாத நிலையில் அது உலகக்கோப்பை தொடரிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இரு வீரர்கள்

இரு வீரர்கள்

அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். அது அந்த சிக்கலுக்கு விடை அளித்தது.

ஸ்ரேயாஸ் ஐயர் கலக்கல்

ஸ்ரேயாஸ் ஐயர் கலக்கல்

ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக பேட்டிங் செய்து இரண்டு ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து அரைசதம் அடித்தார். அதன் மூலம், இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஆக நிரந்தர இடத்தை பிடிப்பார் என கருதப்பட்டது.

ரிஷப் பண்ட் பார்ம்

ரிஷப் பண்ட் பார்ம்

மறுபுறம், ரிஷப் பண்ட் உலகக்கோப்பை முதல், வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை மோசமான் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து வந்தார். மிகக் குறைவான ரன்களே எடுத்து இருந்தார். தென்னாப்பிரிக்கா தொடர் தான் அவருக்கு கடைசி என கருதப்பட்டது.

இரண்டாம் டி20

இரண்டாம் டி20

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. இரண்டாம் டி20யில் ரிஷப் பண்ட்டை நான்காம் வரிசையில் இறக்கினார் கேப்டன் கோலி. வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து, எப்போதும் போல தவறான ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பண்ட்.

அதிரடி வீரர்

அதிரடி வீரர்

ரிஷப் பண்ட் அதிரடி வீரர் எனும் நிலையில் அவருக்கு நான்காம் வரிசை சரியான பேட்டிங் வரிசையாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியிலும் ரிஷப் பண்ட் நான்காம் வரிசையில் களமிறங்கி சொதப்பினார்.

மூன்றாம் டி20 பேட்டிங் வரிசை

மூன்றாம் டி20 பேட்டிங் வரிசை

எனவே, மூன்றாவது டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரை நான்காம் வரிசையில் களமிறக்க வேண்டும். அது தான் சரியான முடிவாக இருக்கும் என பலரும் கருதுகின்றனர். என்ன செய்யப் போகிறார் கோலி?

Story first published: Sunday, September 22, 2019, 11:08 [IST]
Other articles published on Sep 22, 2019
English summary
IND vs SA : Rishabh Pant should play 5th in the batting order and Shreyas Iyer must move up in the batting order.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X