For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே போட்டி.. டாப் கியரை போட்டு தூக்கிய ரோஹித், அஸ்வின்.. பிரேக் போட்ட கோலி.. மாறிய தரவரிசை!

Recommended Video

India vs South Africa 1st Test | ICC Rankings | ஒரே போட்டியால் மாறிய தரவரிசை!

துபாய் : இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் முடிந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை வெளியானது.

இந்த தரவரிசையில் சிறப்பாக ஆடிய அனைத்து இந்திய வீரர்களும் முன்னேறி உள்ளனர். விராட் கோலி மட்டும் குறிப்பட்ட அளவு புள்ளிகள் கீழே சரிந்துள்ளார்.

தமிழக வீரரான அஸ்வின் பந்துவீச்சாளர்கள் வரிசையில் நீண்ட காலம் கழித்து மீண்டும் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.

ரொம்ப நன்றி! தரமான சம்பவம் செய்து விட்டு.. கோலி, ரவி சாஸ்திரியை குத்திக் காட்டிய சிக்ஸர் மன்னன்!ரொம்ப நன்றி! தரமான சம்பவம் செய்து விட்டு.. கோலி, ரவி சாஸ்திரியை குத்திக் காட்டிய சிக்ஸர் மன்னன்!

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன முதல் டெஸ்டில் இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, அஸ்வின், மயங்க் அகர்வால், ஜடேஜா, புஜாரா, ஷமி என பலரும் சிறப்பாக ஆடினர். இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டு சதம்

இரண்டு சதம்

ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சதம் அடித்தார். துவக்க வீரராக தன் முதல் டெஸ்ட் போட்டியில் இறங்கினாலும், பல சாதனைகளை தகர்த்து எறிந்தார் அவர்.

சிக்ஸர் சாதனை

சிக்ஸர் சாதனை

ஒரே டெஸ்டில் அதிக சிக்ஸ் அடித்த வாசின் அக்ரமின் (12 சிக்ஸர்கள்) சாதனையை இந்தப் போட்டியில் முறியடித்தார் ரோஹித். இந்த நிலையில், அவரது டெஸ்ட் தரவரிசை புதிய உச்சத்தை பெற்றுள்ளது.

ரோஹித் சர்மா அசத்தல்

ரோஹித் சர்மா அசத்தல்

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா 36 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பெற்றுள்ளார். இந்த டெஸ்ட் தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவர் சதம் அடிக்கும் பட்சத்தில் முதல் பத்து இடங்களுக்குள் அவர் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது.

இரட்டை சதம் அடித்த மயங்க்

இரட்டை சதம் அடித்த மயங்க்

தன் முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய மயங்க் அகர்வால் 38 இடங்கள் முன்னேறி 25வது இடத்தை பிடித்துள்ளார். அவர் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் 8 விக்கெட்கள்

அஸ்வின் 8 விக்கெட்கள்

அஸ்வின் கலக்கலாக ஆடி 8 விக்கெட்கள் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 350 விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முத்தையா முரளிதரனுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார்.

அஸ்வின் முன்னேற்றம்

அஸ்வின் முன்னேற்றம்

அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 14ஆம் இடத்தில் இருந்து நான்கு இடங்கள் முன்னேறி 10ஆம் இடம் பிடித்துள்ளார். மேலும், டெஸ்ட் ஆல் - ரவுண்டர் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் மீண்டும் வந்துள்ளார்.

ஷமி, ஜடேஜா நிலை

ஷமி, ஜடேஜா நிலை

ஐந்து விக்கெட்கள் வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர் ஷமி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 18வது இடத்தில் இருக்கிறார். ஆறு விக்கெட்கள் எடுத்த ஜடேஜா ஆல் - ரவுண்டர் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

கோலி சறுக்கல்

கோலி சறுக்கல்

கேப்டன் விராட் கோலி மட்டுமே இந்த வரிசையில் புள்ளிகள் அடிப்படையில் பெரும் அளவு சறுக்கி இருக்கிறார். தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் விராட் கோலி, 38 புள்ளிகள் சரிந்துள்ளர். எனினும், இரண்டாம் இடத்திலேயே தொடர்கிறார்.

ஸ்டீவ் ஸ்மித் முந்தினார்

ஸ்டீவ் ஸ்மித் முந்தினார்

ஸ்டீவ் ஸ்மித் கடந்த மாதம் விராட் கோலியை முந்தி முதல் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரன் குவித்து கோலி அவரை முந்துவார் என எதிர்பார்த்த நிலையில், 38 புள்ளிகள் சரிந்துள்ளார்.

Story first published: Monday, October 7, 2019, 19:13 [IST]
Other articles published on Oct 7, 2019
English summary
IND vs SA : Rohit sharma, Ashwin, Mayank Agarwal, Jadeja improved their test rankings after first test heroics.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X