For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆத்தாடி.. தலை சுத்த வைக்கும் இமாலய சாதனை.. டான் பிராட்மேன் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா!

Recommended Video

IND VS SA 1ST TEST | ROHIT SHARMA | பிராட்மேன் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா-வீடியோ

விசாகப்பட்டினம் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்து கலக்கிய ரோஹித் சர்மா டான் பிராட்மேனின் பேட்டிங் சராசரி சாதனை ஒன்றை முந்தி இருக்கிறார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களமிறங்கினார்.

ரோஹித் மீது விமர்சனம்

ரோஹித் மீது விமர்சனம்

ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் சரியான வாய்ப்பு இன்றி இருந்தார். அவர் சரியாக ரன் குவிப்பதில்லை என கூறப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆடி வந்தார். அதிலும் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கூட அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டும், போட்டிகளில் வாய்ப்பின்றி வெளியே அமர வைக்கப்பட்டார். அதன் பின் இந்திய மண்ணில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முதன் முறையாக துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார்.

அதிரடி சதம்

அதிரடி சதம்

துவக்க வீரராக தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே முத்திரை பதித்தார் ரோஹித் சர்மா. ஆம், அதிரடியாக ஆடி சதம் அடித்த ரோஹித் சர்மா, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்ததோடு பல்வேறு சாதனைகளையும் செய்தார்.

சொந்த மண்ணில் சாதனை

சொந்த மண்ணில் சாதனை

அதில் முக்கியமானது, சொந்த மண்ணில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர் என்பது. டெஸ்ட் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் தான் இந்த சாதனையையும் வைத்து இருந்தார்.

டான் பிராட்மேன் சராசரி

டான் பிராட்மேன் சராசரி

டான் பிராட்மேன் தன் சொந்த மண்ணில் (ஆஸ்திரேலியா) 50 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 4322 ரன்கள் குவித்து, பேட்டிங் சராசரியாக 98.22 வைத்துள்ளார். அதை முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா.

ரோஹித் சராசரி

ரோஹித் சராசரி

ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் 115 ரன்கள் அடித்து இருந்த போது, இந்திய மண்ணில் 15 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் 884 ரன்கள் குவித்து இருந்தார். இதன் சராசரி 98.22. இதன் மூலம், டான் பிராட்மேன் சராசரியை சமன் செய்தார். அதன் பின்னும் ரோஹித் சர்மா தொடர்ந்து ரன் குவித்து, அவரது சராசரியை முந்தினார்.

சராசரி குறையலாம்

சராசரி குறையலாம்

ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் ஆட்டமிழந்தால் அவரது சராசரி குறையலாம். எனினும், 90க்கும் மேல் தான் அவரது சராசரி இருக்கும். டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் இருப்பார். எப்படிப் பார்த்தாலும் இது இமாலய சாதனை தான்.

சாதனை துவக்க ஜோடி

சாதனை துவக்க ஜோடி

இந்திய அணியின் மாயங்க் அகர்வால் - ரோஹித் சர்மா, துவக்க ஜோடியாக பல்வேறு சாதனைகளை முறியடித்து ஆடி வருகிறது. இந்தியா 68 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 238 ரன்கள் குவித்துள்ளது.

Story first published: Thursday, October 3, 2019, 11:44 [IST]
Other articles published on Oct 3, 2019
English summary
IND vs SA : Rohit Sharma beat Don Bradman batting average in home tests. He surpassed his batting average of 98.22 in home tests.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X