
கோலியின் பரிசோதனை
மூன்றாவது டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். சேஸிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் பேட்டிங் தேர்வு செய்து பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டார் கோலி.

பேட்டிங் சரிவு
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தவான் மட்டுமே சற்று பொறுப்பாக ஆடி 36 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். இந்திய அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தியா பந்துவீச்சு
அடுத்து இந்திய அணியின் பந்துவீச்சின் போது சில பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்தனர். க்ருனால் பண்டியா, ஹர்திக் பண்டியா மற்றும் நவ்தீப் சைனி ஆகிய மூவரும் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் கொடுத்தனர்.

சைனி பந்துவீச்சு
நவ்தீப் சைனி இரண்டு ஓவர்களில் 25 ரன்களை வாரிக் கொடுத்து தன் மோசமான பந்துவீச்சில் ஒன்றாக இந்தப் போட்டியை மாற்றினார். அவரது இரண்டாவது ஓவரின் போது தான் அந்த சம்பவம் நடந்தது.

ரோஹித் தான் கேப்டன்
12வது ஓவருக்கு முன் கேப்டன் விராட் கோலி மைதானத்தை விட்டு வெளியேறினார். அதனால், துணை கேப்டன் ரோஹித் சர்மா அந்த ஓவருக்கு கேப்டனாக செயல்பட்டார். நவ்தீப் சைனி 12வது ஓவரை வீசினார்.

சைனி செய்த தவறு
நவ்தீப் சைனி அந்த ஓவரின் நான்காவது பந்தை பவுமா பவுண்டரிக்கு விரட்டினார். அதற்கு அடுத்த பந்தை லெக் திசையில் வீசினார் சைனி. பவுண்டரி அடிக்க எளிதாக இருக்கும் வகையில் வீசினார். பவுமா மீண்டும் பவுண்டரி அடித்தார்.

ரோஹித் சர்மா கோபம்
அந்த இரண்டாவது பவுண்டரிக்கு பின் ரோஹித் சர்மா கோபம் அடைந்தார். "மூளையை பயன்படுத்தி பவுலிங் போட வேண்டும்" எனக் குறிப்பிடுவது போல தலையில் விரலை சுட்டிக் காட்டி, கூறினார் ரோஹித்.
— Liton Das (@BattingAtDubai) September 24, 2019 |
வைரல் வீடியோ
ரோஹித் சர்மா கோபம் அடைந்து திட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இளம் வீரர் நவ்தீப் சைனி வேகமாக பந்து வீசினாலும், இன்னும் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவில்லை என விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்தியா தோல்வி
இந்தப் போட்டியில் இந்தியா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வெற்றி இலக்கை 16.5 ஓவர்களிலேயே எட்டிய தென்னாப்பிரிக்கா தொடரை 1 - 1 என சமன் செய்தது.