For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம டி20 ரெக்கார்டு.. இன்னும் 85 ரன் அடிச்சா போதும்.. அந்த நியூசி. வீரரை மறுபடியும் ஓட விட்றலாம்!

மும்பை : ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 85 ரன்கள் குவிக்கும் பட்சத்தில், நியூசிலாந்து வீரரை வீழ்த்தி புதிய சாதனை ஒன்றை செய்வார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன டி20 போட்டி செப்டம்பர் 15 முதல் துவங்கி நடைபெற உள்ளது.

2020 டி20 உலகக்கோப்பை தொடருக்காக தங்களை தயார்படுத்திக் கொள்ள மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை, இரு அணிகளும் பயன்படுத்திக் கொள்ள உள்ளன.

அந்த மாதிரி ஒரே ஒரு இன்னிங்க்ஸ் போதும்.. தோனி கொடுத்த அதே வாய்ப்பு.. கை விட்டுறாதீங்க ஹிட்மேன்!அந்த மாதிரி ஒரே ஒரு இன்னிங்க்ஸ் போதும்.. தோனி கொடுத்த அதே வாய்ப்பு.. கை விட்டுறாதீங்க ஹிட்மேன்!

சாதனைகள்

சாதனைகள்

ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் ஏற்கனவே பல்வேறு சாதனைகளை தன் வசமாக்கி வைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள், அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனைகள் ரோஹித் சர்மா வசம் தான் உள்ளது.

மீண்டும் வாய்ப்பு

மீண்டும் வாய்ப்பு

முன்னதாக முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை பின் தள்ளி ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்தார். தற்போது மீண்டும் மார்ட்டின் கப்தில்-இன் குறிப்பிட்ட டி20 சாதனை ஒன்றை முறியடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதிக ரன்கள் சாதனை

அதிக ரன்கள் சாதனை

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் மார்ட்டின் கப்தில் 424 ரன்கள் குவித்துள்ளார். அதன் மூலம், அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார் மார்ட்டின் கப்தில்.

85 ரன்கள் வேண்டும்

85 ரன்கள் வேண்டும்

ரோஹித் சர்மா 340 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 85 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் கப்தில் சாதனையை முறியடித்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்.

முதல் போட்டி

முதல் போட்டி

முதல் டி20 போட்டி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் நடைபெற உள்ளது. மொத்தம் மூன்று போட்டிகள் இருப்பதால், ரோஹித் நிச்சயம் இந்த சாதனையை செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அனுபவம் குறைந்த அணி

அனுபவம் குறைந்த அணி

அனுபவம் குறைந்த இளம் வீரர்கள் கொண்ட தென்னாப்பிரிக்கா அணிக்கு க்விண்டன் டி காக் தலைமை ஏற்றுள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பையில் சறுக்கிய அந்த அணி, டி20 உலகக்கோப்பையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவை சந்திக்க உள்ளது.

Story first published: Saturday, September 14, 2019, 16:35 [IST]
Other articles published on Sep 14, 2019
English summary
IND vs SA : Rohit Sharma to break Martin Guptill record against South Africa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X