For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா இந்தியன் டீம்! இந்த “கத்துக்குட்டி” டீம்கிட்ட தோத்துட்டு வந்துறாதீங்க.. மானமே போயிடும் #INDvSA

மும்பை : கத்துக்குட்டி தென்னாப்பிரிக்கா அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தால், கடும் விமர்சனத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன டி20 தொடர் செப்டம்பர் 15 முதல் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏற்பாடுகளில் இரு அணிகளும் தீவிரமாக இறங்கி உள்ளன.

வலுவான இந்திய அணியை வீழ்த்த தென்னாப்பிரிக்கா அணி திட்டம் தீட்டி வருகிறது.

கத்துக்குட்டி தென்னாப்பிரிக்காவா?

கத்துக்குட்டி தென்னாப்பிரிக்காவா?

சரி, அது என்ன கத்துக்குட்டி தென்னாப்பிரிக்கா அணி? தென்னாப்பிரிக்கா வலுவான அணியாச்சே! என்று சிலருக்கு சந்தேகம் வரலாம். ஆனால், உண்மை அது தான். இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி கத்துக்குட்டி அணி தான்.

உலகக்கோப்பையில் மரண அடி

உலகக்கோப்பையில் மரண அடி

2019 உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட மரண அடிக்குப் பின் தென்னாப்பிரிக்கா அணி புதுப் பொலிவுடன் துவங்குகிறோம் என பல அனுபவ வீரர்களையும் கழட்டி விட்டுள்ளது. கேப்டன் டு ப்ளேசிஸ் உட்பட.

டேல் ஸ்டெய்ன் இல்லை

டேல் ஸ்டெய்ன் இல்லை

டேல் ஸ்டெய்ன் கூட டி20 அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவர் டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெற வேண்டி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இருந்தாலும் அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மில்லர் மட்டுமே

மில்லர் மட்டுமே

இந்திய டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் டேவிட் மில்லர் மட்டுமே அனுபவ வீரர். 70 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார் அவர். அவர் அதிரடி பேட்ஸ்மேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 140.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

அவரை தவிர்த்து, கேப்டன் க்விண்டன் டி காக் 36 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். ரபாடா 19 போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்தாலும், முன்னணி வேகப் பந்துவீச்சாளர். இவர்கள் மூவர் மட்டுமே நட்சத்திர வீரர்கள்.

அனுபவம் குறைவு

அனுபவம் குறைவு

டேவிட் மில்லர், டி காக் தவிர மற்ற வீரர்கள் யாரும் 25 டி20 போட்டிகளில் கூட ஆடி இருக்காத வீரர்கள். 14 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் நான்கு வீரர்கள் புதுமுகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிரட்டும் வீரர்கள்

மிரட்டும் வீரர்கள்

இருந்தாலும், மற்ற வீரர்கள் அனைவரும் உள்ளூர் டி20 தொடர்களில் கலக்கிய வீரர்கள். ஐபிஎல் போல, நடைபெறும் டி20 தொடர்களில் கலக்கிய வீரர்கள், உள்ளூர் தொடர்களில் உச்சகட்ட பார்மில் இருக்கும் வீரர்கள் என பார்த்து, பார்த்து தேர்வு செய்துள்ளது தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

இவர்களில் முக்கிய வீரர்கள் வான் டர் டஸ்ஸன், ஹென்ரிக்ஸ், ப்ரீடோரியஸ், டெம்பா பவுமா ஆகிய அதிரடி வீரர்கள் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார்கள். போட்டிகளை தனியாக வெல்லும் திறன் கொண்டவர்கள்.

பந்துவீச்சில் யார்?

பந்துவீச்சில் யார்?

வேகப் பந்துவீச்சில் ரபாடா முன்னிலையில் இருக்க, ஜோர்ன் போர்ட்யூன், ப்யூரான் ஹென்ரிக்ஸ் ஆகியோர் உள்ளூர் தொடர்களில் சாதித்து நம்பிக்கை அளிக்கிறார்கள். சுழற் பந்துவீச்சில் இந்தியாவின் குல்தீப் யாதவ் போன்றவர் டப்ராயிஸ் ஷாம்ஸி.

கவனம் வேண்டும்

கவனம் வேண்டும்

இந்த தென்னாப்பிரிக்கா அணி கத்துக்குட்டி என்றாலும், நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள். இந்திய அணி இவர்களிடம் கவனமாக ஆட வேண்டும். அனுபவம் இல்லாத வீரர்கள் என அசால்ட்டாக இருந்தால், போட்டுத் தள்ளி விடுவார்கள். அப்புறம் கத்துக்குட்டி டீமிடம் தோற்ற அணி என்ற விமர்சனத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

Story first published: Saturday, September 14, 2019, 10:11 [IST]
Other articles published on Sep 14, 2019
English summary
IND vs SA : South Africa players are less experienced but capable of beating Indian team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X