For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்துவீச்சாளராக இருந்த ஷர்துல் தாக்கூர் ஆல் ரவுண்டராக மாறியது எப்படி? ஒரு இரவு தந்த பாடம்..!!

ஜோகனஸ்பர்க்: கடந்த டிச 26ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கேப்டன் கோலி அறிமுகம் செய்தார்.

அப்போது பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூரை, விராட் கோலி ஆல் ரவுண்டர் என்று குறிப்பிட்டார்.

“3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ! “3 மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு” கங்குலி உடல்நிலை எப்படி உள்ளது?; அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ!

ஒரு பந்துவீச்சாளராக அணியில் அறிமுகமான ஷர்துல் தாக்கூர், ரசிகர்களால் லார்ட் தாக்கூர் என்று போற்றும் அளவுக்கு மாறியது எப்படி..

பிரிஸ்பேன் டெஸ்ட்

பிரிஸ்பேன் டெஸ்ட்

ஷர்துல் தாக்கூருக்கு பேட்டிங் சுமாராக தான் வரும், ஆனால் அவர் முதன் முதலில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியது ஐ.பி.எல். தொடரில் தான். பரவாயில்ல,,இந்த பையனுக்கு பேட்டிங் வரும் போல என நினைக்க வைத்தார்.ஆனால் தாம் ஒரு ஆல்ரவுண்டர் என அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தான் நிரூபித்தார்.

இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்து டெஸ்ட்

அந்த டெஸ்ட் போட்டியில் அவர் 115 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். இதே போன்று இங்கிலாந்தக்கு எதிரான ஓவல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் அரைசதம் விளாச, அவருக்கு ரசிகர்கள் லார்ட் என்று பட்டம் தந்து புகழ்ந்தனர். சாதாரண பந்துவீச்சாளராக இருந்த தாக்கூர் எப்படி ஆல்ரவுண்டராக மாறினார் என்று தெரியுமா?

அன்றைய இரவு

அன்றைய இரவு

2019 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்யும் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து இருந்தால் போட்டி சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்கு சென்று இருக்கும். ஆனால் மலிங்கா வீசிய பந்தில் ஷர்துல் ஆட்டமிழக்க, சென்னையின் ஐ.பி.எல். கனவு பறிப்போய்விடும்.

சபதம் போட்ட ஷர்துல்

சபதம் போட்ட ஷர்துல்

அன்றைய இரவு தம்மால் அணி தோற்று விட்டதாக எண்ணிய ஷர்துல் தாக்கூர், டவலால் முகத்தை மூடி கொண்டு அழுதுள்ளார். அப்போது அங்கு வந்த சி.எஸ்.கே. பந்துவீச்சாளர் எரிக் சிம்மன்ஸ், மலிங்கா சிறப்பாக பந்துவீசினார், உன் மீது தவறு இல்லை என்று கூறியதற்கு. இனி இப்படி நடக்காது, நான் இனி பேட்டிங்கிலும் கவனம் செலுத்த போகிறேன் என்று கூறினார் ஷர்துல். சொன்ன மாதிரியே, இப்போது பேட்டிங்கிலும் தூள் கிளப்புறார் ஷர்துல்..

Story first published: Thursday, January 6, 2022, 19:32 [IST]
Other articles published on Jan 6, 2022
English summary
Ind vs SA- Story Behind shardul Thakur became allrounder பந்துவீச்சாளராக இருந்த ஷர்துல் தாக்கூர் ஆல் ரவுண்டராக மாறியது எப்படி? ஒரு இரவு தந்த பாடம்..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X