For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலி ரெக்கார்டு காலி.. கேப்டன்சியில் புதிய சகாப்தம்.. வியக்க வைக்கும் கோலியின் சாதனை!

Recommended Video

India vs South Africa 2nd test | Kohli breaks ganguly's record | கங்குலியின் சாதனையை உடைத்த கோலி

புனே : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அடி எடுத்து வைத்த கேப்டன் கோலி இந்திய கேப்டன்களில் புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் கேப்டனாக கங்குலியின் டெஸ்ட் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.

2014 முதல் கேப்டன்

2014 முதல் கேப்டன்

2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் இடையே தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த போது விராட் கோலி கேப்டன் பொறுப்பை பெற்றுக் கொண்டார்.

50 போட்டிகளுக்கு கேப்டன்

50 போட்டிகளுக்கு கேப்டன்

2014 முதல் 2019 வரை 50 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள கோலி, இந்திய அளவில் சிறந்த டெஸ்ட் கேப்டன் என கூறும் அளவிற்கு வெற்றிகளை வாரிக் குவித்துள்ளார்.

50வது டெஸ்ட் போட்டி

50வது டெஸ்ட் போட்டி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மூலம் கோலி, கேப்டனாக தன் 50வது டெஸ்ட் போட்டியில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்திய அளவில் கங்குலியை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதை முறியடித்த கோலி அதிக டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் இந்திய அளவில் கங்குலியை முந்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

தோனி முதல் இடம்

தோனி முதல் இடம்

தோனி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். விரைவில் அந்த சாதனையையும் கோலி முறியடிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

50 சதவீத வெற்றி

50 சதவீத வெற்றி

இந்திய டெஸ்ட் கேப்டன்களில் குறைந்தது 10 போட்டிகளுக்கு மேல் கேப்டனாக இருந்தவர்களில், அதிக வெற்றி சதவீதம் வைத்துள்ளவர் கோலி மட்டுமே. அதுவும் 59 சதவீதம் வைத்துள்ளார்.

அதிக போட்டிகள் வெற்றி

அதிக போட்டிகள் வெற்றி

இந்திய கேப்டன்களில் அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தேடிக் கொடுத்தவர் கோலி தான். அந்த சாதனையை சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் கோலி செய்தார்.

கங்குலி, தோனியை விட சிறப்பு

கங்குலி, தோனியை விட சிறப்பு

இதற்கு முன் சிறந்த இந்திய கேப்டன்களாக அறியப்பட்ட கங்குலி, தோனியை முந்தி இருக்கிறார். கங்குலி 21 டெஸ்ட் வெற்றிகள், தோனி 27 டெஸ்ட் வெற்றிகள் வைத்துள்ள நிலையில், கோலி 29 போட்டிகளில் இதுவரை வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

முக்கிய இடத்தை பிடிக்கும் கோலி

முக்கிய இடத்தை பிடிக்கும் கோலி

இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இந்திய அளவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் கேப்டன் கோலி. சிறந்த டெஸ்ட் கேப்டன் கோலி தான் என கூறும் அளவிற்கு சாதனைகளை செய்து விட்டார்.

கேப்டன்சி மீது விமர்சனம்

கேப்டன்சி மீது விமர்சனம்

ஆனால், இன்னும் கோலியின் கேப்டன்சி குறித்து விமர்சனம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அவரது பீல்டிங் திட்டம், டிஆர்எஸ் முடிவுகள், பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் முறை, அணித் தேர்வு ஆகியவற்றில் அவர் தொடர்ந்து விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.

Story first published: Thursday, October 10, 2019, 17:36 [IST]
Other articles published on Oct 10, 2019
English summary
IND vs SA : Virat Kohli breaks Ganguly’s test captaincy record. Second test match is Kohli’s 50th test match as captain. He became second most Indian player to captain the side in test matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X