For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்டீவ் ஸ்மித்தை எட்டிப் பிடித்த கிங் கோலி.. பாண்டிங் சாதனை சமன்.. ஜஸ்ட் மிஸ் ஆன முக்கிய சாதனை!

Recommended Video

Virat Kohli smashes 26th Test hundred

புனே : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கேப்டன் விராட் கோலி 26வது டெஸ்ட் சதம் கடந்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்து வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து வழக்கம் போல சாதனைளை படைத்துள்ளார். அதில் விரைவாக சதம் அடிப்பதில் தொடர்ந்து பலரையும் முந்தி வந்த கோலி, தற்போது சச்சின், ஸ்டீவ் ஸ்மித்தை விட பின்தங்கி இருக்கிறார்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மாயங்க் அகர்வால் 108, புஜாரா 58 ரன்கள் எடுத்தனர்.

கோலி - ரஹானே கூட்டணி

கோலி - ரஹானே கூட்டணி

பின்னர் விராட் கோலி - ரஹானே ஜோடி போட்டியை கையில் எடுத்துக் கொண்டது. இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். ரஹானே மிகவும் பொறுமையாக ரன் சேர்க்க, கோலி அரைசதம் அடித்து, பின் சதத்தை எட்டினார்.

26வது டெஸ்ட் சதம்

26வது டெஸ்ட் சதம்

173 பந்துகளில் சதத்தை எட்டினார் விராட் கோலி. இது கோலியின் 26வது டெஸ்ட் சதம் ஆகும். கோலியின் போட்டியாளராக பார்க்கப்படும் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரில் தன் 26வது டெஸ்ட் சதத்தை அடித்த நிலையில் அதை சமன் செய்தார் கோலி.

10 இன்னிங்க்ஸ்-க்கு பின்

10 இன்னிங்க்ஸ்-க்கு பின்

மேலும், 10 டெஸ்ட் இன்னிங்க்ஸ்கள் கழித்து கோலி அடித்துள்ள டெஸ்ட் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது கோலி ரசிகர்களை பொறுத்தவரை ஒரு பஞ்சமாகவே பார்க்கப்படுகிறது. அதை போக்கி உள்ளார் கிங் கோலி.

2019இல் முதல் சதம்

2019இல் முதல் சதம்

2019ஆம் ஆண்டில் கோலி அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இது தான். இரு மாதம் முன்பு நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆண்டின் துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரின் கடைசி சில போட்டிகளில் கோலி சதம் அடிக்கவில்லை.

கேப்டனாக சதம்

கேப்டனாக சதம்

டெஸ்ட் அணி கேப்டனாக விராட் கோலி அடிக்கும் 19வது சதம் இதுவாகும். அதிக சதம் அடித்த டெஸ்ட் கேப்டன்கள் வரிசையில் விராட் கோலி பாண்டிங் உடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பாண்டிங் சாதனை சமன்

பாண்டிங் சாதனை சமன்

அதிக சதம் அடித்த டெஸ்ட் கேப்டன்கள் வரிசையில் தென்னாப்பிரிக்க அணியின் கிரேம் ஸ்மித் 25 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங், கோலி இருவரும் 19 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

நான்காம் இடம்

நான்காம் இடம்

138 இன்னிங்க்ஸ்களில் கோலி 26வது டெஸ்ட் சதத்தை எட்டினார். இதன் மூலம், குறைந்த இன்னிங்க்ஸ்களில் 26 டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி நான்காம் இடத்தை பிடித்துள்ளார்.

ஸ்மித், சச்சின்

ஸ்மித், சச்சின்

டான் பிராட்மேன் 69 இன்னிங்க்ஸ்களில் 26 சதம் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்த இரு இடங்களில் ஸ்டீவ் ஸ்மித் (121 இன்னிங்க்ஸ்), சச்சின் (136 இன்னிங்க்ஸ்) உள்ளனர். அவர்களை கோலியால் வீழ்த்த முடியவில்லை.

கூட்டணி சாதனை

கூட்டணி சாதனை

கோலி - ரஹானே கூட்டணி 150 ரன்களுக்கும் மேலாக ரன் குவித்து இந்தப் போட்டியில் சாதனை படைத்தது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களுக்கு கூட்டணி அமைத்த ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த ஜோடி.

Story first published: Friday, October 11, 2019, 13:08 [IST]
Other articles published on Oct 11, 2019
English summary
IND vs SA : Virat Kohli hit 26th test century after 10 innings. He failed to beat Sachin and Steve Smith in quickest 26th century list.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X