For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓடி வந்து பாய்ந்து.. டி காக்கை வெளியே அனுப்பிய கோலி.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்.. வைரல் வீடியோ!

Recommended Video

Virat Kohli one handed catch | கேட்ச் பிடித்து டி காக்கை வெளியே அனுப்பிய கோலி

மொஹாலி : விராட் கோலி பிடித்த ஒற்றை கை கேட்ச் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டி காக் அபாரமாக ஆடி வந்த போது, அவரை தன் அற்புத கேட்ச்சால் ஆட்டமிழக்கச் செய்து அனுப்பி வைத்தார் கோலி.

IND vs SA : தெறிக்கவிட்ட டி காக், பவுமா.. இந்திய அணிக்கு சவால் விட்ட தென்னாப்பிரிக்கா!IND vs SA : தெறிக்கவிட்ட டி காக், பவுமா.. இந்திய அணிக்கு சவால் விட்ட தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்

தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்ய வந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர் ஹென்ரிக்ஸ் கை கொடுக்காவிட்டாலும், கேப்டன் டி காக் நல்ல துவக்கம் அளித்தார். அதிரடியாக பவுண்டரிகள் அடித்து வந்தார்.

டி காக் அபார ஆட்டம்

டி காக் அபார ஆட்டம்

அவருடன் பவுமா ஜோடி சேர்ந்து விக்கெட் இழக்காமல் ஆடினார். இந்த ஜோடி 50 ரன்களுக்கும் மேல் சேர்த்தது. டி காக் எட்டு பவுண்டரிகள் அடித்த அரைசதம் கடந்தார். இறுதியில் சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சைனி ஓவரை வெளுத்தார்

சைனி ஓவரை வெளுத்தார்

முன்னதாக சைனியின் முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளை வெளுத்துக் கட்டி இருந்தார் டி காக். ஹாட்ரிக் ஃபோர் அடித்து இருந்தார். அதனால், அடுத்து அவருக்கு ஓவர் கொடுக்கவில்லை கேப்டன் விராட் கோலி.

அந்த ஓவர்

அந்த ஓவர்

எனினும், மற்ற பந்துவீச்சாளர்களாலும், டி காக் விக்கெட்டை வீழ்த்த முடியாத நிலையில், சைனிக்கு மீண்டும் ஓவர் கொடுத்தார் கோலி. 12வது ஓவரை வீசிய சைனி, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார். .

கோலி சூப்பர் கேட்ச்

டி காக் பந்தை அடிக்க முயன்ற போது, அது லீடிங் எட்ஜ் ஆனது. மேலே பறந்த பந்து, மிட்-ஆஃப் திசையில் கோலி நநின்று இருந்த பகுதிக்கு சிறிது தொலைவில் சென்றது. பந்தை பிடிக்க பாய்ந்து வந்த கோலி, ஒற்றை கையால் பந்தை பிடித்து அசத்தினார்.

ரசிகர்கள் பாராட்டு

அரை நொடி தப்பி இருந்தாலும், கேட்ச்சை நழுவ விட்டிருப்பார் கோலி. எனினும், பாய்ந்து வந்து கையை நீட்டி ஒற்றை கையால் கேட்ச் பிடித்தார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் கோலியை பாராட்டி வருகிறார்கள்.

தென்னாப்பிரிக்கா ஸ்கோர்

தென்னாப்பிரிக்கா ஸ்கோர்

தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. டி காக் 52, பவுமா 49 ரன்கள் குவித்து இருந்தனர். இந்திய அணிக்கு 150 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா.

Story first published: Wednesday, September 18, 2019, 22:09 [IST]
Other articles published on Sep 18, 2019
English summary
IND vs SA : Virat Kohli one handed catch to take the wicket of Quinton de Cock
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X