ஒரே போட்டியில் 5 அறிமுக வீரர்கள்.. மிகப்பெரும் ரிஸ்க் எடுத்த டிராவிட்.. சவாலை எதிர்கொள்ளுமா இலங்கை!

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் 6 வீரர்கள் ஒன்றாக அறிமுகமாவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dravid Indiranagarக்கு மட்டுமில்ல, Indiaவுக்கே Gunda: Deepak Chahar புகழாரம் | OneIndia Tamil

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2ல் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் நாளை 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

 வெற்றி பயணம்

வெற்றி பயணம்

இந்திய அணி பல்வேறு புதுமுக வீரர்களை இலங்கை சுற்றுப்பயணத்திற்கு அழைத்து சென்றிருந்தாலும், முதல் 2 போட்டிகளில் சர்வதேச போட்டிகளின் அனுபவம் பெற்ற வீரர்களே களமிறக்கப்பட்டனர். புதிதாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டனர். எனினும் அவர்கள் இருவருமே அந்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்திக்கொண்டு இருவருமே அரைசதம் விளாசி அசத்தியுள்ளனர்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பாதிக்கு பாதி புதுமுக வீரர்களை களமிறக்கியுள்ளார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். இந்திய அணியில் 9 வீரர்கள் வாய்ப்புக்காக காத்துள்ளனர். அவர்களில் இருந்து 5 பேருக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுக கேப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

யார் அந்த 5 பேர்

யார் அந்த 5 பேர்

அதன்படி சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாட சுமார் 5 ஆண்டுகளாக காத்திருந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இவருடன் சேர்ந்து, நிதிஷ் ராணா, சேட்டன் சக்காரியா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சாஹர் ஆகியோருக்கு தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கடும் சவால் கொடுத்திருந்த சூழலில் இந்திய அணியில் பாதிக்கு பாதி அறிமுக வீரர்களை களமிறக்கி பரிசோதனை செய்யவுள்ளார் ராகுல் டிராவிட். தொடரை ஏற்கனவே வென்றுவிட்டோம், எனவே 3வது ஆட்டத்தில் தோற்றாலும் கவலையில்லை என்ற யோசனையில் தான் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

எந்தெந்த வீரர்கள்

எந்தெந்த வீரர்கள்

ஷிகர் தவான், பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணா, ஹர்திக் பாண்ட்யா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
5 Players have been handed debut caps for Team India for 3rd ODI against Srilanka, Dravid Try to mak experiement
Story first published: Friday, July 23, 2021, 14:51 [IST]
Other articles published on Jul 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X