For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

40 ஆண்டுகள்.. யாரும் எடுக்காத ரிஸ்க்.. துணிவுடன் செய்யும் ராகுல் டிராவிட்.. குவிந்து வரும் பாராட்டு!

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பெரும் ரிஸ்கை எடுத்துள்ளார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

Recommended Video

Rahul Dravid india அணியின் Coach ஆவது கடினம் தான் - Chopra | Oneindia Tamil

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வெற்றி பெற்ற கையுடன் அவசர டீம் மீட்டிங்.. என்ன பேசினார் ராகுல் டிராவிட்.. வீடியோ வெளியிட்டது பிசிசிஐவெற்றி பெற்ற கையுடன் அவசர டீம் மீட்டிங்.. என்ன பேசினார் ராகுல் டிராவிட்.. வீடியோ வெளியிட்டது பிசிசிஐ

5 அறிமுக வீரர்கள்

5 அறிமுக வீரர்கள்

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இதனால் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் வீரர்களை ஒட்டுமொத்தமாக களமிறக்கியுள்ளார் டிராவிட். ஆம், 3வது போட்டியில் மட்டும் 5 வீரர்களுக்கு தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

யார் அந்த 5 பேர்

யார் அந்த 5 பேர்

பேட்டிங்கை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். பவுலிங்கில் சேட்டன் சக்காரியா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சாஹர் ஆகியோர் தங்களது முதல் போட்டியில் களமிறங்குகின்றனர். கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி இருந்த இஷான் கிஷான், புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்ட்யா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் வெளியில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். மணிஷ் பாண்டே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இன்னும் சரியாக செயல்படாமல் உள்ளதால் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

30 வருடம்

30 வருடம்

கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரே போட்டியில் 5 வீரர்களை அறிமுகம் செய்வது இது, 2வது முறையாகும். ( முதல் ஒருநாள் போட்டி முடிந்த பிறகு) இதற்கு முன்னர் கடந்த 1980ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எம்சிஜி மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக திலிப் தோஷி, கிர்டி அசாத், ரோஜர், பின்னி, சந்தீப் பட்டில், திருமலை ஸ்ரீனிவாசன் ஆகியோர் அறிமுகமாகினர். எனவே 40 ஆண்டுகாலத்தில் யாரும் எடுக்காத ரிஸ்க்கை டிராவிட் இன்று எடுத்துள்ளார்.

ரிஸ்க் என்ன

ரிஸ்க் என்ன

டிராவிட்டின் இந்த முடிவால் இந்திய அணியின் பந்துவீச்சு துறையில் தான் அதிகம் ரிஸ்க் இருப்பதாக பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் தவான், மணிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா என அனுபவ வீரர்கள் இருக்கும் போதிலும், பந்துவீச்சில் ஒட்டுமொத்தமாக புதுமுக வீரர்களாக உள்ளனர். இவர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்தெந்த வீரர்கள்

எந்தெந்த வீரர்கள்

ஷிகர் தவான், பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், நிதிஷ் ராணா, ஹர்திக் பாண்ட்யா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா

Story first published: Friday, July 23, 2021, 18:10 [IST]
Other articles published on Jul 23, 2021
English summary
IND vs SL 3rd ODI: after the 30 years, Team India having five debutants in an ODI after their inaugural ODI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X