For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருப்பா இவரு? இத்தனை நாளா எங்கே இருந்தாரு? 152கிமீ. வேகம்.. மிரட்டிய இளம் இந்திய பவுலர்!

Recommended Video

இலங்கையை மிரட்டிய இந்திய பவுலர்கள்

இந்தூர் : இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்று வரும் இளம் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி மின்னல் வேகத்தில் பந்து வீசி மிரட்டினார்.

இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக 140 கிலோமீட்டர் என்ற அளவில் தான் பந்து வீசி வருகின்றனர்.

இந்த நிலையில், அதையும் மீறி 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் கவர்ந்துள்ளார் நவ்தீப் சைனி.

அணியில் இடம்

அணியில் இடம்

நவ்தீப் சைனி அதிக வேகத்தில் பந்து வீசுவதாலேயே பலரின் கவனத்தை ஈர்த்து படிப்படியாக வளர்ந்து இந்திய அணியில் இடம் பெற்றார். உலகக்கோப்பை தொடரின் முடிவில் இந்திய அணி இளம் வீரர்களை தேர்வு செய்யத் துவங்கியது.

பரிசோதனை முயற்சி

பரிசோதனை முயற்சி

அப்போது ஐபிஎல் தொடரின் சிறப்பான செயல்பாட்டை மனதில் வைத்து நவ்தீப் சைனியை டி20 உலகக்கோப்பை அணிக்காக பரிசோதனை செய்ய முடிவு செய்து அணியில் சேர்த்தது இந்திய அணி நிர்வாகம்.

147 கிலோமீட்டர் வேகத்தில் அவுட்

147 கிலோமீட்டர் வேகத்தில் அவுட்

நவ்தீப் சைனி தன் முதல் போட்டி முதல் சிறப்பாக பந்து வீசி ஈர்த்து வந்தார். இந்த நிலையில், இலங்கை தொடரில் இடம் பெற்றார். இந்தப் போட்டியில் 147 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி குணதிலகாவை பவுல்டு அவுட் செய்தார் சைனி.

உச்சத்தை தொட்ட சைனி

உச்சத்தை தொட்ட சைனி

தொடர்ந்து தான் வீசிய பந்துகளில் பெரும்பாலானவற்றை 145 கிலோமீட்டர் வேகத்திற்கும் அதிகமாக வீசி இலங்கை பேட்ஸ்மேன்களை மிரட்டினார். 10வது ஓவரில் தன் உச்சத்தை தொட்டார் சைனி.

152 கிமீ வேகம்

152 கிமீ வேகம்

10வது ஓவரின் முதல் பந்தை மின்னல் வேகத்தில் வீசிய சைனி, 152 கிலோமீட்டர் வேகத்தை எட்டி சாதனை படைத்தார். இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் யாரும் இத்தனை வேகத்தை எட்டியதாக நினைவில் இல்லை.

ஆடுகளம் எப்படி?

ஆடுகளம் எப்படி?

இத்தனைக்கும், இரண்டாவது போட்டி நடைபெறும் இந்தூர் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் என்றும், பந்துவீச்சுக்கு அதிக வேகம் கொடுக்காத ஆடுகளம் என்றும் கூறப்படுகிறது.

டெஸ்ட் அணியில் சைனி!

டெஸ்ட் அணியில் சைனி!

அப்படி இருந்தும் அதிக வேகத்தில் பந்து வீசி மிரட்டி இருக்கிறார் சைனி. இதையடுத்து நவ்தீப் சைனியை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் குறிப்பிட்டு கூறி வருகின்றனர்.

சிறப்பான பந்துவீச்சு

சிறப்பான பந்துவீச்சு

இந்தப் போட்டியில் நவ்தீப் சைனி 4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ராவை விட சிறப்பாக பந்து வீசி அசத்தினார் சைனி.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

மேலும், இந்திய பந்துவீச்சாளர்களில் மிகக் குறைவாக ரன்கள் கொடுத்தவர் நவ்தீப் சைனி மட்டுமே. ஷர்துல் தாக்குர் 3, வாஷிங்க்டன் சுந்தர் 1, குல்தீப் யாதவ் 2, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Story first published: Tuesday, January 7, 2020, 22:30 [IST]
Other articles published on Jan 7, 2020
English summary
IND vs SL : Navdeep Saini hit 152KM per hour in 2nd T20. He also bowled better than Bumrah.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X