விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டி.. திடீரென வந்த பிரச்னை.. இந்திய அணி பிரஷர்!

கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழை குறுக்கிட்டதால் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மட்டும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் தொடங்கியது.

ஒலிம்பிக் 2020 வில்வித்தை ரேங்கிங் சுற்று.. மோசமாக சொதப்பிய இந்திய வீரர்கள்.. 3 வீரர்களும் சறுக்கல்! ஒலிம்பிக் 2020 வில்வித்தை ரேங்கிங் சுற்று.. மோசமாக சொதப்பிய இந்திய வீரர்கள்.. 3 வீரர்களும் சறுக்கல்!

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஓப்பனிங் சிறப்பாக அமையவில்லை. கேப்டன் அதிரடியாக ஆட முயன்ற ஷிகர் தவான் 13 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் சஞ்சு சாம்சன் மற்றும் பிரித்வி ஷா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான வேகத்தில் ரன்களை உயர்த்திய இந்த ஜோடி 2வது விக்கெட்டிற்கு 74 ரன்களை சேர்த்தது.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

தனது அறிமுக போட்டியிலேயே மிக சாதுர்யமாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் 46 ரன்களை எடுத்து அவுட்டானார். மறுமுனையில் ஆடி வந்த பிரித்வி ஷா 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 118 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து சற்று சரிவை சந்தித்தது. பின்னர் வந்த மணிஷ் பாண்டே - சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நிதானமாக ரன்களை உயர்த்தி வந்தனர்.

மழையின் குறுக்கீடு

மழையின் குறுக்கீடு

இந்நிலையில் ஆட்டத்தின் 23வது ஓவரில் மழை குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த மழையினால் மைதானத்தின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியிருந்த சூழல் நிலவுகிறது. மழை நீரை சுத்தப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 ஓவர்கள் குறைப்பு

ஓவர்கள் குறைப்பு

மழை சற்று நின்றுள்ளதால் போட்டி மீண்டும் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் நேரமின்மை காரணமாக இரு அணிகளுக்குமான ஓவர்கள் 47 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய அணிக்கு 24 ஓவர்கள் மட்டுமே இருப்பதால் வேகமாக ரன்களை உயர்த்த முற்படும்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rain Takes a breathe, overs Reduced to 47 on the 3rd ODI of India vs Srilanka
Story first published: Friday, July 23, 2021, 20:34 [IST]
Other articles published on Jul 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X