இத்தோட கதை முடிஞ்சுது.. ரன் எடுக்கலைன்னா கழட்டி விட்ருவாங்க.. சீனியர் வீரருக்கு வார்னிங்!

மும்பை : இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவானுக்கு அடுத்து நடக்க உள்ள இலங்கை டி20 தொடர் கடைசி வாய்ப்பாகவும் மாறலாம்.

உலகக்கோப்பை தொடருக்குப் பின் தவான் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். சராசரியாக ரன் எடுத்தாலும், ஸ்ட்ரைக் ரேட்டில் சொதப்பி வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு இலங்கை தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

அந்த மேட்டரை இனிமே நாங்களே பார்த்துக்குறோம்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு "நோ".. பிசிசிஐ அதிரடி உத்தரவு!

டெஸ்ட் அணியில் நீக்கம்

டெஸ்ட் அணியில் நீக்கம்

ஷிகர் தவான் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிப்பதில்லை என்ற காரணத்தால் முன்னதாக டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். டி20 மற்றும் ஒருநாள் அணியில் ரோஹித் சர்மாவுடன் துவக்கம் அளித்து வருகிறார்.

தவான் காயம்

தவான் காயம்

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு முழுவதும் பல முறை காயத்தால் அவதிப்பட்டு வந்தார் தவான். உலகக்கோப்பையில் கை விரல் காயம், கழுத்தில் வலி என அவதிப்பட்டு பல போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.

பார்ம் அவுட்

பார்ம் அவுட்

இடையே பார்ம் அவுட் ஆனார் தவான். தன் இயல்பான பேட்டிங்கில் ஆட முடியாமல் பந்துவீச்சை சமாளிக்க திணறி வந்தார். அவரால் சக துவக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு அழுத்தம் அதிகரிப்பதாகவும் சில விமர்சகர்கள் கூறினர்.

ராகுல் அசத்தல் ஆட்டம்

ராகுல் அசத்தல் ஆட்டம்

தவான் காயமடைந்த போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துவக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் அசத்தலாக ஆடி தனக்கென அணியில் ஒரு இடத்தை உறுதி செய்துள்ளார். இந்த நிலையில், தவான் காயம் குணமடைந்தார்.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

இந்தியா அடுத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வரும் நிலையில், இன்னும் சில தொடர்களுக்குள் சரியான அணியை தேர்வு செய்ய வேண்டும். எனவே, தவானுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, ஆஸி. தொடர்கள்

இலங்கை, ஆஸி. தொடர்கள்

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தவான் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் டி20 தொடரில் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்க உள்ளதால், ராகுல் - தவான் துவக்கம் அளிக்க உள்ளனர்.

தவான் நிலை

தவான் நிலை

தவான் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் துவக்க வீரராக களமிறங்க உள்ளார். அந்த மூன்று போட்டிகளில் அவர் ரன் குவித்தால் மட்டுமே ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

ரோஹித் சர்மா வருவார்

ரோஹித் சர்மா வருவார்

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான அணியில் ராகுல், தவான், ரோஹித் என மூவரும் உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளனர். எனவே, தவான் இலங்கை டி20 தொடரிலேயே தன்னை நிரூபிக்க வேண்டும்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தியில் ஜனவரி 5 அன்று துவங்க உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IND vs SL : Shikar Dhawan have to prove himself in Sri Lanka T20 series.
Story first published: Saturday, January 4, 2020, 17:36 [IST]
Other articles published on Jan 4, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X