For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

INDvsSL:INDvsSL:மீண்டும் ஏமாற்றிய பாண்ட்யா.. கடைசி நேரத்தில் சறுக்கல்.. இலங்கைக்கு சவாலான இலக்கு நிர்ணயம்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்புக்கு ரன்களை எடுத்துள்ளது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பிரித்வி ஷா டக் அவுட்டாகி ஏமாற்றினார். இது அவரது முதல் சர்வதேச டி20 போட்டியாகும். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் தவான் - சஞ்சு சாம்சன் ஜோடி நிதான ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்தினர் இந்த ஜோடி 2வது விக்கெட்டிற்கு 51 ரன்களை குவித்தது. 20 பந்துகளில் 27 ரன்களை எடுத்த சஞ்சு சாம்சன் அசரங்கா பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆனார்.

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

மிகவும் குறைவான ஸ்கோருடன் திணறி வந்த இந்திய அணியை ஷிகர் தவான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி மீட்டனர். அதிரடியாக விளையாடிய தவான் 36 பந்துகளில் 46 ரன்களை சேர்த்து அவுட்டானார். மறுமுணையில் விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் 50 ரன்களை விளாசினார். இதனால் 15.2 ஓவர்களில் இந்திய அணி 127 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது.

கடைசி ஓவர்கள்

கடைசி ஓவர்கள்

கடைசி 5 ஓவர்களில் இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற சூழலிலும் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் அளித்தார். 12 பந்துகளை சந்தித்த அவர் 10 ரன்களே மட்டும் எடுத்து வெளியேறினார். இதனால் கடைசி ஓவர்களில் இஷான் கிஷான் மட்டும் (20) சிறிது அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது.

எதிர்பார்பு

எதிர்பார்பு

சமீபத்திய தொடர்களில் இலங்கை அணி 2வது இன்னிங்ஸில் பெரும் அளவில் சொதப்பி வருகிறது. இந்திய அணி நிர்ணயித்துள்ள 165 என்ற டார்கெட் எளிமையானதாக இருந்தாலும், இலங்கை பேட்ஸ்மேன்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Story first published: Sunday, July 25, 2021, 23:14 [IST]
Other articles published on Jul 25, 2021
English summary
Suryakumar yadhav, Shikar Dhawan Helps India to set a 165 target in 1st t20 against Srilanka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X