
பாராட்டு
மேற்கிந்திய தீவுகள் போன்ற சிறந்த பேட்டிங் அடங்கிய அணியை 157 ரன்களை சுருட்டியது மிகவும் நல்ல விசயம். முழு பெருமையும் எங்கள் பந்துவீச்சாளர்களையே சேரும். பேட்டிங்கில் இன்னும் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் நாங்கள் தவறுகளிலிருந்து கற்று கொள்கிறோம். எங்கள் கவனம் எல்லாம் டி20 உலககோப்பை மீதே உள்ளது.

நல்ல எதிர்காலம்
இளம் வீரர் ரவி பிஸ்னாய் திறமையானவர், அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ரவி பிஸ்னாய் ஆட்டத்தின் எந்த பகுதியாக இருந்தாலும் கூட, பவர்பிளே மற்றும் இறுதிக் கட்டத்தில் கூட பந்துவீச கூடிய திறன் அவரிடம் உள்ளது. இதனால் தான் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. இனி அவரை எப்படி பயன்படுத்த போகிறோம் என்பதில் தான் உள்ளது.

ஆல் ரவுண்டர்
ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற திறமையான வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காதது கஷ்டமானது தான். ஆனால் அணியின் நிலைமை அப்படி தான் உள்ளது. எங்களுக்கு நடுவரிசையில் பந்துவீச கூடிய ஒரு ஆல்ரவுண்டர் தேவை. இதனை நான் ஸ்ரேயாஸ் ஐயரிடம் தெரியப்படுத்தி விட்டேன். வீரர்கள் அனைவரும் புத்திசாலிகள். அவர்களுக்கு அணியில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.

விரும்பவில்லை
இஷான் கிஷனை பொறுத்தவரை, அவரிடம் நான் நிறைய முறை பேசி இருக்கிறேன். அவருக்கு பேட்டிங்கில் நடுவரிசை சுத்தமாக ஒத்து வராது. கடந்த ஐபிஎல் தொடரில் சென்னையில் விளையாடிய போது, அவர் மிகவும் சிரமப்பட்டார். தற்போது கோலியுடன் விளையாடும் போது அவர் நிறைய கற்றிருப்பார். இஷான் கிஷனை சுற்றி நெருக்கடி ஏற்பட நான் விரும்பவில்லை.