For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாஸ் வென்றதும் கண்ணை மூடிக் கொண்டு பீல்டிங் தேர்வு செய்த கேப்டன்.. காரணம் இது தான்! #INDvsWI

ப்ளோரிடா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன முதல் டி20 போட்டியில் டாஸ் முக்கியமாக கருதப்பட்டது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடாவில் துவங்கியது.

இந்தப் போட்டியில் எந்த அணி டாஸ் வெல்கிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்பட்டது.

போட்டிக்கு முன் மழை

போட்டிக்கு முன் மழை

அதற்கு முக்கிய காரணம், போட்டிக்கு முந்தைய தினம் மழை பெய்து ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததே. அதனால், முதலில் பந்துவீசும் அணிக்கு சாதகமான சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. பேட்டிங் செய்யும் அணி மிகவும் சிரமத்துக்கு உள்ளாகும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும் என விமர்சகர்கள் கருத்து கூறி இருந்தனர்.

கோலி முடிவு

கோலி முடிவு

இந்தியா டாஸ் வென்ற உடன் கேப்டன் விராட் கோலி கண்ணை மூடிக் கொண்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். அது குறித்து கூறுகையில், ஆடுகளம் மூடப்பட்டு இருந்ததால் ஈரப்பதமாக இருக்கும். போட்டி செல்ல செல்ல சூரிய ஒளியால் ஆடுகளம் தட்டையாக மாறும் என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் பின்னடைவு

வெஸ்ட் இண்டீஸ் பின்னடைவு

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் கூறுகையில், நாங்களும் அதே காரணங்களுக்காக முதலில் பந்து வீசவே விரும்பினோம் என தெரிவித்தார். ஆனால், டாஸ் ராசியில்லாதவராக அறியப்படும் கோலி, அதிர்ஷ்டவசமாக டாஸ் வென்றதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

பேட்டிங் செய்ய சாதகம்

பேட்டிங் செய்ய சாதகம்

ஆடுகளம் தட்டையாக மாறினால் அது பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். எனவே, இந்திய அணி டாஸ் வென்றதால் கிட்டத்தட்ட பாதி போட்டியில் வென்றது போன்ற நிலை ஏற்பட்டது. மேலும், இந்திய அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்று ஆச்சரியம் அளித்தனர்.

பந்துவீச்சாளர்கள் யார்?

பந்துவீச்சாளர்கள் யார்?

க்ருனால் பண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றனர். அதே போல, வேகப் பந்துவீச்சிலும் புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது மற்றும் நவ்தீப் சைனி என மூன்று வீரர்கள் இடம் பெற்றனர். நவ்தீப் சைனி தன் அறிமுகப் போட்டியில் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 3, 2019, 20:27 [IST]
Other articles published on Aug 3, 2019
English summary
IND vs WI 2019 1st T20 : Virat Kohli won toss which is very important
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X