For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது.. ஒரே போட்டி.. 2 இன்னிங்க்ஸ்.. ஊர் வாயை அடைத்த துணை கேப்டன்!

Recommended Video

ஒரே இன்னிங்க்ஸ்.. எல்லோர் வாயையும் அடைத்த ரஹானே | Ind Vs WI Test | Ajinkya Rahane

ஆன்டிகுவா : இந்திய டெஸ்ட் அணி துணை கேப்டன் ரஹானே "பார்ம் அவுட். சரியாக ரன் எடுக்கவில்லை. சதம் அடித்து ரொம்ப நாளாச்சு" என்றெல்லாம் இனி யாரும் பேச முடியாது.

ஆம், இரண்டு ஆண்டுகள் கழித்து சதம் அடித்து எல்லோர் வாயையும் அடைத்துள்ளார் ரஹானே. முன்னாள் வீரர்கள், தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரையும் தாண்டி ஊரில் இருப்பவர்கள் எல்லாம் தன்னைப் பற்றி விமர்சனம் செய்து வந்த நிலையில், அதை ஒரே போட்டியில் மாற்றி இருக்கிறார்.

இந்தியா - வெ.இண்டீஸ் போட்டி

இந்தியா - வெ.இண்டீஸ் போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 297 ரன்கள் எடுத்தது,. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்க்ஸில் 222 ரன்கள் சேர்த்தது. இந்தியா 75 ரன்கள் முன்னிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடியது.

ரஹானே சதம்

ரஹானே சதம்

இரண்டாம் இன்னிங்க்ஸில் கேப்டன் கோலி 51 ரன்கள் எடுத்தார். ரஹானே, விஹாரி கூட்டணி சேர்ந்து இந்திய அணியை பெரிய ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றனர். இந்த முயற்சியில் ரஹானே சதம் அடித்தார்.

இரண்டு ஆண்டுகள்

இரண்டு ஆண்டுகள்

சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து டெஸ்ட் போட்டியில் ரஹானே சதம் அடித்துள்ளார். இது அவரது 10வது டெஸ்ட் போட்டி சதம் ஆகும். முதல் இன்னிங்க்ஸிலும் ரஹானே அபாரமாக ஆடி இருந்தார்.

முதல் இன்னிங்க்ஸ் அபாரம்

முதல் இன்னிங்க்ஸ் அபாரம்

முதல் இன்னிங்க்ஸ் இந்தியா 25 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்த போது கை கொடுத்த ரஹானே 81 ரன்கள் சேர்த்தார். அப்போது சதத்தை தவறவிட்டாலும், இரண்டாம் இன்னிங்க்ஸில் சதம் அடித்தார். 1௦2 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பழைய கதை

பழைய கதை

ஒரு காலத்தில் கோலிக்கு நிகராக புகழப்பட்டவர் தான் ரஹானே. டெஸ்ட் போட்டிகளில், குறிப்பாக வெளிநாடுகளில் ரன் மழை பொழிந்தார். அதனால் தான் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் பொறுப்பு தேடி வந்தது.

இனி பேச முடியாது

இனி பேச முடியாது

ஆனால், அதன் பின் சரியாக ரன் எடுக்கவில்லை. மிகவும் சுமாராக ஆடி வந்த அவர் அவ்வப்போது அரைசதம் அடித்தார். கடந்த இரு ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்தார். அதனால், எழுந்த அத்தனை விமர்சனங்களையும் ஒரே போட்டியில், இரண்டு இன்னிங்க்ஸிலும் ரன் குவித்து மாற்றிக் காட்டி இருக்கிறார். இனி யாரும் ரஹானே பார்ம் பற்றி பேச முடியாது.

பெரிய ஸ்கோர்

பெரிய ஸ்கோர்

இந்திய அணி ரஹானே ஆட்டமிழந்த போது 322 ரன்கள் குவித்து இருந்தது. ஹனுமா விஹாரி அரைசதம் கடந்து ஆடி வந்தார்.. இந்திய அணி 400 ரன்களை தாண்டி முன்னிலை பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 400க்கும் மேற்பட்ட ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயிக்கும்.

Story first published: Monday, August 26, 2019, 9:03 [IST]
Other articles published on Aug 26, 2019
English summary
IND vs WI 2019 : Ajinkya Rahane hit century against West Indies. This is his first ton in 2 years.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X