For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன் கோலி அஸ்வினை நீக்க இது தான் காரணமா? வெடிக்கும் புதிய சர்ச்சை.. பரபரக்கும் ரசிகர்கள்!

Recommended Video

இந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ

ஆன்டிகுவா : டெஸ்ட் அணியில் அஸ்வின் சேர்க்கப்படாமல் போனதை அடுத்து இந்திய ரசிகர்கள் கேப்டன் கோலியின் முடிவை கேள்வி எழுப்பி, விமர்சித்து வருகிறார்கள்.

அஸ்வின் பல சாதனைகள் செய்தும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பான ரெக்கார்டு வைத்திருந்தும் அணியில் தேர்வு செய்யப்படாமல் இருப்பது குறித்து சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

அஸ்வின் - கோலி இடையே ஏதோ கருத்து வேறுபாடு உள்ளது, விரிசல் உள்ளது என சிலர் கூறி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அதிர்ச்சியா இருக்கு.. ஆச்சரியமா இருக்கு.. அஸ்வினுக்கு போய் இப்படி பண்ணிடீங்களே.. புலம்பிய கவாஸ்கர்! அதிர்ச்சியா இருக்கு.. ஆச்சரியமா இருக்கு.. அஸ்வினுக்கு போய் இப்படி பண்ணிடீங்களே.. புலம்பிய கவாஸ்கர்!

அஸ்வின் நிலை

அஸ்வின் நிலை

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக வலம் வந்த அஸ்வின் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களின் இடையே காயம் அடைந்ததால் அணியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். குல்தீப் யாதவ் முன்னிலைப் படுத்தப்பட்டார்.

இருவருக்கும் இடம் இல்லை

இருவருக்கும் இடம் இல்லை

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருவருக்குமே அணியில் இடம் அளிக்கவில்லை கோலி,. ஜடேஜா மட்டுமே சுழற் பந்துவீச்சாளராக இடம் பெற்றார்.

வெஸ்ட் இண்டீஸ் சாதனை

வெஸ்ட் இண்டீஸ் சாதனை

அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சாதித்து இருக்கிறார். அந்த அணிக்கு எதிராக மட்டுமே 11 டெஸ்ட் போட்டிகளில் 60 விக்கெட்களும், 552 ரன்களும் குவித்துள்ளார் அஸ்வின்.

அதிக விக்கெட்கள்

அதிக விக்கெட்கள்

அது மட்டுமின்றி, 65 டெஸ்ட் போட்டிகள் ஆடி உள்ள அஸ்வின் 342 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். இதே அளவு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய போது வேறு எந்த பந்துவீச்சாளரும் இத்தனை விக்கெட்கள் வீழ்த்தி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முத்தையா முரளிதரன், ஷேன் வார்னேவையும் சேர்த்து தான் இந்த புள்ளி விவரம் கூறப்படுகிறது. அவர்களும் இத்தனை விக்கெட்கள் வீழ்த்தி இருக்கவில்லை.

அஸ்வின் - கோலி பிளவு

அஸ்வின் - கோலி பிளவு

இப்படி பந்துவீச்சில் கலக்கி வரும் அஸ்வினுக்கு ஏன் அணியில் வாய்ப்பு இல்லை? கேப்டன் கோலி - அஸ்வின் இடையே ஏதோ பிளவு இருக்கிறது. அதனால் தான் ஒருநாள் போட்டிகளிலும் அஸ்வின் நீக்கப்பட்டார். தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என கூறுகிறார்கள்.

ரோஹித் - கோலி விரிசல்

ரோஹித் - கோலி விரிசல்

முன்னதாக ரோஹித் சர்மா - கோலி இடையே உலகக்கோப்பை தொடருக்குப் பின் விரிசல் என செய்திகள் வெளியானது. அந்த சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை. குறிப்பாக முதல் டெஸ்டில் ரோஹித் சர்மாவுக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அதோடு, அஸ்வின் விவகாரமும் சேர்ந்துள்ளது.

என்ன தான் நடக்கிறது?

என்ன தான் நடக்கிறது?

இந்திய அணியில் என்ன தான் நடக்கிறது? ஏன் மூத்த, அனுபவ வீரர்கள் பலர் தொடர்ந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்? ஏன் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்காத ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு அமர்த்தப்பட்டார்? இந்த கேள்விகளுக்கு பிசிசிஐயில்பலருக்கும் விடை தெரிந்தாலும், எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள்.

Story first published: Friday, August 23, 2019, 13:53 [IST]
Other articles published on Aug 23, 2019
English summary
IND vs WI 2019 : Ashwin dropped because of differences with captain Kohli says fans
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X