For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பூம் பூம் பும்ராவின் செம ஹாட்ரிக் சாதனை.. பெரிய உதவி செய்த கோலி.. மேஜிக் மாதிரி இருந்துச்சு!

கிங்க்ஸ்டன் : வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மேஜிக் செய்வது போல அசால்ட்டாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தன் பந்துவீச்சால் நிலைகுலைய வைத்தார்.

காரணம் யார்?

காரணம் யார்?

டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்தார் பும்ரா. அவர் ஹாட்ரிக் சாதனை படைக்க முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பந்துவீச்சு அதிரடிக்கு முன் பேட்டிங்கில் இந்தியா வெளுத்தது.

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ்

இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் 416 ரன்கள் குவித்தது. மாயங்க் அகர்வால் 55, விராட் கோலி 76, ஹனுமா விஹாரி 111, இஷாந்த் சர்மா 57 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை.

பும்ரா விக்கெட்

பும்ரா விக்கெட்

இந்திய அணி துவக்கத்தில் இருந்தே அச்சுறுத்தத் துவங்கியது. அதிலும் பும்ரா மிரட்டினார். 7வது ஓவரில் துவக்க வீரர் ஜான் கேம்பல் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து 9வது ஓவரில் விக்கெட் வேட்டை நடத்தினார்.

ஹாட்ரிக் ஓவர்

ஹாட்ரிக் ஓவர்

அந்த ஓவரில் தான் ஹாட்ரிக் எடுத்தார் பும்ரா. 9வது ஓவரின் இரண்டாவது பந்தில் டேரன் பிராவோ, மூன்றவது பந்தில் ப்ரூக்ஸ், நான்காவது பந்தில் ராஸ்டன் சேஸ் என மூன்று விக்கெட்களை வரிசையாக எடுத்தார்.

கோலி டிஆர்எஸ்

கோலி டிஆர்எஸ்

சேஸ் விக்கெட்டை அம்பயர் முதலில் கொடுக்கவில்லை. பந்து காலில் பட்டதாக நினைத்து பும்ரா அவுட் கேட்ட போது அம்பயர் மறுத்து விட்டார். அனைவரும் இதை ஒப்புக் கொண்டாலும், விராட் கோலி காலில் தான் பட்டது என உறுதியாக ரிவ்யூ கேட்டார்.

கோலி இல்லாமல் சாத்தியமில்லை

கோலி இல்லாமல் சாத்தியமில்லை

ரிவ்யூவில் அது அவுட் தான் என முடிவானது. அதை அடுத்து பும்ரா மூன்றாவது விக்கெட்டை எடுத்து அவர் ஹாட்ரிக் எடுக்க காரணமாக இருந்தார் கோலி. ஹாட்ரிக் விக்கெட் என்பதால் கோலி உணர்ச்சிவசப்பட்டு ரிவ்யூ கேட்டு விட்டாரோ? என்று தான் பலரும் நினைத்தனர். ஆனால், சரியாக கணித்து இருந்தார் கோலி.

மொத்தம் 6 விக்கெட்கள்

மொத்தம் 6 விக்கெட்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த ஹாட்ரிக் விக்கெட்டால் 8.4 ஓவரில் 13 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்தது. அதன் பின்னும் பும்ரா விடவில்லை. பிராத்வைட், ஜேசன் ஹோல்டர் விக்கெட்டையும் எடுத்து மொத்தம் 6 விக்கெட்களை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் ஆட்ட நேர முடிவில் 87 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருக்கிறது.

இந்திய சாதனை

இந்திய சாதனை

பும்ரா தன் ஹாட்ரிக் மூலம் இந்திய அளவில் சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அளவில் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்த மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார் பும்ரா.

முந்தைய ஹாட்ரிக்

முந்தைய ஹாட்ரிக்

இதற்கு முன் 2001 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங்கும், 2006இல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இர்பான் பதானும் ஹாட்ரிக் விக்கெட்கள் எடுத்து உள்ளனர். இதில் இர்பான் பதான் டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்து யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேஜிக் பந்துகள்

மேஜிக் பந்துகள்

இரண்டாம் நாளின் முடிவில் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பும்ரா மேஜிக் பந்துகள் மூலம் எங்கள் பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். சாயங்காலம் நன்றாக ஸ்விங் செய்தார். கடினமாக இருந்தார் என குறிப்பிட்டு பாராட்டினார்.

Story first published: Sunday, September 1, 2019, 11:13 [IST]
Other articles published on Sep 1, 2019
English summary
IND vs WI 2019 : Bumrah hatrick won’t be possible without Virat Kohli DRS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X