For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா அது? பும்ரா சொன்ன அந்த டெக்னிக்.. விக்கெட்டை அள்ளிய இஷாந்த் சர்மா!

ஆன்டிகுவா : இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரரான இஷாந்த் சர்மா, வேகப் பந்துவீச்சில் கலக்கிக் கொண்டு இருக்கும் இளம் வீரர் ஒருவர் சொன்ன வித்தையை வைத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியில் இஷாந்த் சர்மா அபாரமாக பந்து வீசி இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்கள் சாய்த்தார்.

தான் எப்படி 5 விக்கெட்கள வீழ்த்தினேன் என்பது குறித்து இஷாந்த் சர்மா குறிப்பிட்ட போது அந்த வித்தை பற்றி கூறினார்.

மழையால் பாதித்த போட்டி

மழையால் பாதித்த போட்டி

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக மழை பெய்ததால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. முதல் சில மணி நேரம் பேட்டிங் செய்ய கடினமானதாக இருந்தது. அப்போது டாஸில் தோற்ற இந்திய அணி பேட்டிங் செய்து தடுமாறியது.

இந்தியா 297 ரன்கள்

இந்தியா 297 ரன்கள்

புஜாரா, கோலி ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். 25 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்தது இந்திய அணி. பின்னர் ரஹானே 81, ஜடேஜா 58 ரன்கள் அடிக்க, இந்திய அணி 297 ரன்கள் குவித்தது.

வெ.இண்டீஸ் அபாரம்

வெ.இண்டீஸ் அபாரம்

அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து ரன் குவித்து வந்தது. 50 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தாலும், பின்னர் 174 ரன்களுக்கு 5 விக்கெட்கள் மட்டுமே இழந்து ஆடி வந்தது. இரண்டாம் நாளின் இறுதிக் கட்டத்தை எட்டி இருந்தது போட்டி.

மாற்றம் சொன்ன பும்ரா

மாற்றம் சொன்ன பும்ரா

அப்போது இடையே பெய்த மழையால் ஆடுகளம் மந்தமாக இருந்தது. பந்துவீச்சில் எதுவும் எடுபடவில்லை. அப்போது இளம் வீரர் பும்ரா , கிராஸ் சீம்-இல் பந்து வீசலாம் என கூறி இருக்கிறார். அதே போல, பந்தின் தையல் பகுதிக்கு குறுக்கே பந்தை வீசினார் இஷாந்த் சர்மா.

இஷாந்த் சர்மா அசத்தல்

இஷாந்த் சர்மா அசத்தல்

கடைசி சில ஓவர்களில் சராமரியாக 3 விக்கெட்களை வீழ்த்தினார். அதற்கு முன்னதாக இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி இருந்த அவர் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 174 ரன்களுக்கு 5 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்து 179 ரன்களுக்கு 8 விக்கெட்கள் என்ற நிலையை அடைந்தது.

மூத்த வீரருக்கு..

மூத்த வீரருக்கு..

அணியில் மூத்த வீரரான இஷாந்த் சர்மாவுக்கு என்ன வித்தை செய்யலாம் எனக் கூறி கலக்கி இருக்கிறார் நம்பர் 1 வேகப் பந்துவீச்சாளரான பும்ரா. இத்தனைக்கும் பும்ரா தன் 11வது டெஸ்ட் போட்டியில் தான் ஆடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 25, 2019, 10:22 [IST]
Other articles published on Aug 25, 2019
English summary
IND vs WI 2019 : Bumrah’s technique helped Ishant Sharma to pick 5 wickets in first test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X