மத்தவங்க கூட பரவாயில்லை.. அவர் நிலைமை ரொம்ப மோசம்.. 7 மாசமா மேட்ச் இல்லை!

Indian test players returns | கிடைத்த போட்டிகளில் ஆடிய இந்திய டெஸ்ட் வீரர்கள்..

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : நீண்ட நாட்களுக்குப் பின் மூத்த இந்திய வீரர்கள் சிலர் இந்திய அணிக்கு திரும்பி உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அடுத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெற உள்ள பயிற்சிப் போட்டியில் பங்கேற்க டெஸ்ட் அணி வீரர்கள் புஜாரா, அஸ்வின், இஷாந்த் சர்மா, அஜின்க்யா ரஹானே, மாயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா ஆகியோர் தயாராகி வருகின்றனர்.

அதெல்லாம் ஒரு நாடு..? உசுருக்கு உத்தரவாதமில்ல.. ஆள விடுங்க..! கும்பிடு போட்டு ஓடிய பயிற்சியாளர்

டெஸ்ட் வீரர்கள் தனி

டெஸ்ட் வீரர்கள் தனி

இந்திய அணியில் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் என தனி ஒதுக்கீட்டில் சில வீரர்களை வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கொடுப்பது இல்லை.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

அவர்கள் அனைவரும் கடந்த ஏழு மாதங்களாக எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. சிலர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றனர். முக்கிய டெஸ்ட் வீரர் புஜாராவுக்கு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அவரை எந்த ஐபிஎல் அணியும் வாங்கவில்லை.

கடைசி டெஸ்ட் எப்போது?

கடைசி டெஸ்ட் எப்போது?

கடந்த ஜனவரி மாதம் தான் இந்தியா கடைசியாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த தொடருக்குப் பின் இந்திய அணி முழுமையாக உலகக்கோப்பையை நோக்கி பயணிக்கத் துவங்கியது.

என்ன செய்தார்கள்?

என்ன செய்தார்கள்?

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஒருநாள் தொடர்கள், ஐபிஎல் என குறைந்த ஓவர் போட்டிகளில் மட்டுமே இந்திய வீரர்கள் ஆடினர். டெஸ்ட் வீரர்களான அஸ்வின், ரஹானே ஐபிஎல் தொடருக்குப் பின் இங்கிலாந்து கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தங்களை மெருகேற்றிக் கொண்டனர். புஜாரா தவிர அனைவரும் உள்ளூர் மற்றும் முதல் தர போட்டிகளில் பங்கேற்றார்கள்.

புஜாரா நிலை

புஜாரா நிலை

புஜாரா நிலை தான் ரொம்ப மோசம். அவர் சில உள்ளூர் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். எனினும், அவர் அதிக முதல் தர போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் நடைபெற உள்ள பயிற்சிப் போட்டி இவர்கள் அனைவருக்கும் சிறப்பான பயிற்சியாக இருக்கும். இந்த பயிற்சிப் போட்டி ஆகஸ்ட் 17 முதல் நடைபெற உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இனி வரும் டெஸ்ட் தொடர்கள் அனைத்துமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கம் என்பதால் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடும் வீரர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். அதற்கு ஈடு கொடுக்க வேண்டும். என்ன செய்யப் போகிறார்கள் என பார்க்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI 2019 : Indian test players returned to the team for practice match
Story first published: Saturday, August 17, 2019, 13:32 [IST]
Other articles published on Aug 17, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X