For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது பெரிய சாதனை ஆச்சே.. அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காத ரகசியம் இது தானா? அதிர வைக்கும் தகவல்!

Recommended Video

Watch Video : Reason behind Ashwin not getting chance in test match?

மும்பை : அஸ்வின் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணம் குறித்து பலரும் பல்வேறு கோணத்தில் பேசி வருகிறார்கள்.

கிரிக்கெட்டை அரசியலாக பார்க்கும் சிலர் சொல்லும் ஒரு காரணம், அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அணி அரசியல் என்பதை தாண்டி, சாதனை அரசியல் என்ற புதிய விஷயமாக உள்ளது.

ஆம், தன் அடுத்த போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்கள் வீழ்த்தி விட்டால், மிகப் பெரும் சாதனை செய்வார். ஆனால், சாதகமான சூழலில் வாய்ப்பு கிடைத்தால் தானே அதை செய்ய முடியும்.

பலே கோலி! எல்லா கதவுகளும் மூடப்பட்டது.. ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இனி வாய்ப்பே கிடைக்காதுபலே கோலி! எல்லா கதவுகளும் மூடப்பட்டது.. ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இனி வாய்ப்பே கிடைக்காது

அஸ்வின் கலக்கல்

அஸ்வின் கலக்கல்

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் அஸ்வின் கலக்கி எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் கடந்த காலங்களில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 11 டெஸ்ட் போட்டிகளில் 60 விக்கெட்களோடு, 500க்கும் மேற்பட்ட ரன்களும் குவித்துள்ளார்.

இரண்டாம் போட்டியும் சந்தேகம்

இரண்டாம் போட்டியும் சந்தேகம்

அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற ஜடேஜா அசத்தலாக ஆடியதால், இரண்டாம் டெஸ்டிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது

நீடித்த மர்மம்

நீடித்த மர்மம்

அஸ்வினுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை. அணி நிர்வாகம் கூறுவது போல, அணியின் சம நிலை மட்டும் தான் தேர்வு செய்யாமல் போக காரணமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. முன்னாள் வீரர்கள் கவாஸ்கர் கங்குலி ஆகியோர் அஸ்வினுக்கு இடம் இல்லாதது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

வலம் வரும் கிசுகிசு

வலம் வரும் கிசுகிசு

இந்த நிலையில் தான் அஸ்வின் சாதனை ஒன்று குறித்த கிசுகிசு பேசப்பட்டு வருகிறது. அஸ்வின் இதுவரை 65 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 342 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

என்ன சாதனை?

என்ன சாதனை?

அடுத்த போட்டியில் இன்னும் 8 விக்கெட்கள் வீழ்த்தினால், விரைவாக 350 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை முத்தையா முரளிதரனுடன் பகிர்ந்து கொள்வார். ஏற்கனவே, 300 விக்கெட்களை விரைவாக வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஸ்வின் செய்தது குறிப்பிடத்தக்கது.

300இல் இருந்து சிக்கல்

300இல் இருந்து சிக்கல்

அந்த 300 விக்கெட் சாதனையை அவர் செய்ததில் இருந்து தான் சிக்கல் தொடங்கியது என்றே கூறலாம். அப்போது முதல் தான் அவர் செயல்பாடு சரியில்லை. சரியாக விக்கெட் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் அதிகரித்தது.

பெரும் சாதனை

பெரும் சாதனை

ஆனால், அவர் டென்னிஸ் லில்லீ என்ற பந்துவீச்சு ஜாம்பவானை வீழ்த்தி விரைவாக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்பதை பலரும் மறந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

வார்னே, முரளிதரனை விட அதிகம்

வார்னே, முரளிதரனை விட அதிகம்

இன்னும் சொல்லப் போனால், முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே, ஆகிய இருவரை விட விரைவாக விக்கெட்கள் வீழ்த்தி வருகிறார் அஸ்வின். தற்போது 65 போட்டிகளில் அஸ்வின் 342 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இதே 65 டெஸ்ட் போட்டிகளில் வேறு யாரும் அஸ்வினை விட அதிக விக்கெட்கள் வீழ்த்தவில்லை.

350 விக்கெட்கள் எடுப்பாரா?

350 விக்கெட்கள் எடுப்பாரா?

தற்போது 66 போட்டிகளில் 350 விக்கெட்கள் வீழ்த்தினால், முத்தையா முரளிதரனுக்கு இணையாக விரைவாக 350 விக்கெட்கள் வீழ்த்திய சாதனை படைப்பார். ஆனால், அவருக்கு எப்போது இனி டெஸ்டில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்பதே தெரியாத நிலை தான் உள்ளது.

உண்மையா?

உண்மையா?

சிலர் சொல்வது போல, 350 விக்கெட்கள் சாதனை தான் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்க காரணமா? யார் அதை தடுக்க நினைக்கிறார்கள்? ஏன் என்பதெல்லாம் மர்மமாகவே உள்ளது.

Story first published: Friday, August 30, 2019, 16:11 [IST]
Other articles published on Aug 30, 2019
English summary
IND vs WI 2019 : Is this the reason behind Ashwin not getting chance in test match?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X