For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்பாடா.. கேப்டனுக்கு என் நன்றிக்கடனை தீர்த்துட்டேன்.. ஜடேஜா எதை சொல்றாருன்னு புரியுதா?

Recommended Video

விராட் கோஹ்லிக்கு நன்றிக்கடன் செலுத்திய ஜடேஜா- வீடியோ

ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜா அரைசதம் அடித்து கேப்டன் கோலிக்கு தன் நன்றிக் கடனை தீர்த்துள்ளார்.

இது ஏதோ நாமாக கற்பனை செய்து கூறவில்லை. ஜடேஜா போட்டியின் இரண்டாம் நாள் முடிந்த உடன் பேசிய போது கிட்டத்தட்ட அப்படித் தான் கூறினார்.

ஜடேஜா அடித்த அரைசதத்தால் தான் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டியது. அது ஒருபுறம் இருந்தாலும் அஸ்வினை இந்தப் போட்டியில் தேர்வு செய்யவில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜா தான் அணியில் இடம் பிடித்தார். அஸ்வினை தேர்வு செய்யாதது பெரும் விமர்சனத்துக்கு உள்ளா

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

முதல் டெஸ்டுக்கு முன் இந்திய அணியில் அஸ்வின் - குல்தீப் யாதவ் இடையே யார் அணியில் இடம் பெறுவார்கள் என்ற குழப்பம் இருந்தது. ஆனால், இருவருமே அணியில் தேர்வு செய்யப்படவில்லை. ஜடேஜா மட்டுமே ஒரே சுழற் பந்துவீச்சாளராக அணியில் இடம் பெற்றார்.

ஆல்-ரவுண்டர் அஸ்வின் இல்லை

ஆல்-ரவுண்டர் அஸ்வின் இல்லை

அஸ்வின் வெறும் சுழற் பந்துவீச்சாளர் மட்டும் அல்ல. நல்ல ஆல்-ரவுன்டரும் கூட. அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டரான ஜடேஜா அணியில் இடம் பெற்றார். அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறந்த பேட்டிங், பந்துவீச்சு ரெக்கார்டு வைத்து இருந்தும் அவரை அணியில் தேர்வு செய்யாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது அணியை காப்பாற்றிய ரஹானே 81 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 189 ரன்கள் அடித்து இருந்த போது அவர் ஆட்டமிழந்தார். அதன் பின் அணி மீண்டும் தடுமாறிய போது ஜடேஜா அணிக்கு கை கொடுத்தார்.

ஜடேஜா அசத்தல் அரைசதம்

ஜடேஜா அசத்தல் அரைசதம்

இஷாந்த் சர்மா உடன் 8வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தார் ஜடேஜா. மேலும், அரைசதம் அடித்து அணி 297 ரன்களை எட்ட உதவினார். அவரால் தான் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருக்க வேண்டிய இந்திய அணி 297 ரன்களை எட்டியது.

ஜடேஜா சொன்ன விளக்கம்

இந்த அசத்தல் ஆட்டதுக்குப் பின் பேசிய ஜடேஜா, கேப்டன் தன்னை முக்கிய வீரர் என்று அணியில் தேர்வு செய்த நிலையில், அந்த நம்பிக்கைக்கு திருப்பிக் கொடுக்கும் வகையில் என்னால் சிறப்பாக ஆட முடிந்தது என்றார்.

நன்றிக்கடன் தீர்த்தாச்சு

அஸ்வினை விட முக்கிய சுழற் பந்துவீச்சாளர் என ஜடேஜாவை அணியில் சேர்த்தார் கேப்டன் கோலி. அந்த நன்றிக் கடனை தீர்க்கும் வகையில் அரைசதம் அடித்து இருக்கிறார் ஜடேஜா. அவர் கூறியதை அப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. எப்படியோ முதல் டெஸ்டில் வெற்றி பெற்றால் சரி!

Story first published: Saturday, August 24, 2019, 12:57 [IST]
Other articles published on Aug 24, 2019
English summary
IND vs WI 2019 : Jadeja repay the faith to Kohli for selecting him over Ashwin
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X