For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நமக்கு எதுக்கு தம்பி அந்த ஸ்வீப் ஷாட்? இப்ப சான்ஸ் போச்சே.. இந்திய வீரரை புலம்ப விட்ட ஸ்பின்னர்!

ஆன்டிகுவா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் பெரிய அளவில் ரன் குவிக்காமல் போன ராகுல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் புலம்பி இருக்கிறார்.

குறிப்பாக இரண்டாவது இன்னிங்க்ஸில் அவர் தேவையே இல்லாமல் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தார்.

ராகுலின் அடிப்படை பேட்டிங் சிறப்பானது என்றாலும், பெரிய ரன் குவிக்கும் நேரத்தில் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்து விடுவார் என்ற புகார் உள்ளது.

இடம் பறிபோகும்

இடம் பறிபோகும்

அதே போல நன்றாக ரன் எடுத்து வந்த அவர், ஸ்வீப் ஷாட் ஆட முயற்சி செய்து ஆட்டமிழந்தார். மீண்டும் ஒரு முறை தவறான ஷாட் ஆடி விக்கெட்டை பறி கொடுத்ததால், அணியில் அவர் இடம் பறிபோகவும் வாய்ப்பு உள்ளது.

ராகுல் வாய்ப்பு

ராகுல் வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக ராகுல், மாயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டனர். ராகுல் கடைசியாக நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சரியாக ஆடவில்லை. எனினும், தற்போது ப்ரித்வி ஷா தடையில் இருப்பதால் துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார் ராகுல்.

முதல் இன்னிங்க்ஸ்

முதல் இன்னிங்க்ஸ்

இந்த டெஸ்ட் தொடரில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ராகுல், முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 25 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த போது, தாக்குப் பிடித்து ஆடி 44 ரன்கள் எடுத்தார். அரைசதம் அடிக்காவிட்டாலும், அது நல்ல ஸ்கோர் ஆக பார்க்கப்பட்டது.

இரண்டாம் இன்னிங்க்ஸ் சொதப்பல்

இரண்டாம் இன்னிங்க்ஸ் சொதப்பல்

ஆனால், இரண்டாவது இன்னிங்க்ஸில் நன்றாக ஆடி வந்த ராகுல் 38 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த விதம் தான் அவர் மீது விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. சேஸ் வீசிய சுழற் பந்தை மோசமாக கணித்து ஸ்வீப் ஷாட் ஆடி பவுல்டு அவுட் ஆனார்.

ஸ்வீப் ஷாட் விளக்கம்

ஸ்வீப் ஷாட் விளக்கம்

மூன்றாம் நாள் முடிவில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ராகுல், அந்த ஸ்வீப் ஷாட் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார். சில சமயம் ஸ்வீப் ஷாட், பேடில் ஷாட் ஆடும் போது முன் கூட்டியே இப்படி தான் ஆட வேண்டும் என முடிவு செய்வோம். அந்த ஆஃப்-ஸ்பின்னரை (ராஸ்டன் சேஸ்) 5 - 6 ஓவர்களில் ஆடி விட்டதால், அவர் எந்த லைனில் வீசுகிறார் என்பது எனக்கு தெரிந்தது.

ராகுல் புலம்பல்

ராகுல் புலம்பல்

நான் ரன்கள் குவிக்க வேண்டும் என நினைத்ததால் அந்த விக்கெட் எடுத்த பந்துக்கு முன் பவுண்டரி அடித்தேன். அடுத்த பந்தை அவர் எப்படி வீசுவார் என யோசித்து பேடில் ஸ்வீப் அடிக்க முயன்றேன். துரதிர்ஷடவசமாக நான் சரியாக ஆடவில்லை. அந்த போட்டியை அவர் வென்று விட்டார் என்று புலம்பினர் ராகுல்.

நீண்ட இன்னிங்க்ஸ் ஆடணும்

நீண்ட இன்னிங்க்ஸ் ஆடணும்

மேலும், நான் ஏமாற்றத்தில் இருக்கிறேன். ஆனால், பல விஷயங்களை நான் சரியாக செய்து வருகிறேன். நான் 35 - 45 ரன்கள் வரை எப்படி நன்றாக ஆடுகிறேனோ அதே போல, நீண்ட இன்னிங்க்ஸ் ஆட வேண்டும் என்றும் கூறினார்.

ரோஹித் காத்திருப்பு

ரோஹித் காத்திருப்பு

ராகுல் இப்படி புலம்ப முக்கிய காரணம் ரோஹித் சர்மா தான். ரோஹித் சர்மாவை அணியில் எடுக்கவில்லை என கடுமையான விமர்சனம் உள்ளது. மறுபுறம், ராகுல் துவக்க வீரராக இதற்கு முன்பும், தற்போதும் நிரூபிக்கவில்லை. மாயங்க் அகர்வால் இதற்கு முன்பு சிறப்பாகவே ஆடி உள்ளார். அதனால், ராகுலை நீக்கி விட்டு, ரோஹித் சர்மாவை அடுத்த போட்டியில் துவக்க வீரராக ஆட வைக்கவும் வாய்ப்பு உள்ளது.

இன்னும் ஒரு வாய்ப்பு

இன்னும் ஒரு வாய்ப்பு

எனினும், கோலி டெஸ்ட் தொடருக்கு முன் பேசுகையில், மாயங்க் அகர்வால், ராகுல் இருவருக்கும் தங்களை நிருபிக்க, இந்த டெஸ்ட் தொடரின் நான்கு இன்னிங்க்ஸ்கள் என குறிப்பிட்டார். அதனால், ராகுலுக்கு அடுத்த போட்டியே கடைசி போட்டியாகவும் இருக்கலாம்.

Story first published: Sunday, August 25, 2019, 17:32 [IST]
Other articles published on Aug 25, 2019
English summary
IND vs WI 2019 : KL Rahul explains why he tried to hit paddle sweep over Chase bowl
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X