For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசியா 2 போட்டி.. 4 இன்னிங்க்ஸ்! அன்புத் தம்பிக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு!

Recommended Video

IND VS WI TEST 2019 | ராகுலுக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு!- வீடியோ

கூலிட்ஜ் : இந்திய அணியின் துவக்க வீரர் ராகுல் சரியாக ஆடி தன்னை நிரூபிக்க வேண்டும் என பேட்டியின் போது மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 22 அன்று துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கம் என்பதால் இந்தியா நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். தோல்வி பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதைப் போல, டிரா செய்வதும் பாதிப்பை உண்டாக்கும்.

அதனால், அணியில் சமரசம் செய்து கொள்ளும் முடிவை எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார் கேப்டன் கோலி. ராகுல் நிலைமை ஏன் இப்படி ஆனது?

PKL 2019 : வயதான குதிரைகள்.. குத்திக் காட்டி வெற்றி பெற்ற ஜெய்ப்பூர்.. தமிழ் தலைவாஸ் பரிதாபம்! PKL 2019 : வயதான குதிரைகள்.. குத்திக் காட்டி வெற்றி பெற்ற ஜெய்ப்பூர்.. தமிழ் தலைவாஸ் பரிதாபம்!

ராகுல் பார்ம்

ராகுல் பார்ம்

துவக்க வீரர் ராகுல் உலகக்கோப்பை தொடரில் நல்ல பார்மில் தான் இருந்தார். அப்போது தவான் காயத்தால் நீக்கப்பட்ட நிலையில் துவக்க வீரராக சிறப்பாக ஆடினார். இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மாயங்க் அகர்வாலுடன் இணைந்து துவக்கம் அளிக்க உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ராகுல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக வீரர்கள்

அதிக வீரர்கள்

தற்போது அணியின் ரஹானே, ஹனுமா விஹாரி மற்றும் ரோஹித் சர்மா என மிடில் ஆர்டரில் மூன்று வீரர்கள் இடத்திற்கு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மூவருமே டெஸ்டில் துவக்க வீரர்களாக ஆட தகுதி உள்ளவர்கள்.

ராகுலுக்கு சிக்கல்

ராகுலுக்கு சிக்கல்

ஹனுமா விஹாரி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும், ரஹானே சில டெஸ்ட் போட்டிகளிலும் துவக்க வீரராக ஆடி உள்ளனர். ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த துவக்க வீரர். இவர்கள் மூவரில் ஒருவரை துவக்க வீரராக ஆட வைத்தால் மற்ற இருவரும் மிடில் ஆர்டரில் ஆட இடம் கிடைக்கும். இது தான் ராகுலுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

பயிற்சிப் போட்டி

பயிற்சிப் போட்டி

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டியில் ராகுல் விரைவாக ரன் எடுக்க முயற்சி செய்தார். 46 பந்துகளே சந்தித்த அவர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரஹானேவுக்கும் வாய்ப்பு

ரஹானேவுக்கும் வாய்ப்பு

இரண்டாம் இன்னிங்க்ஸில் ரஹானே துவக்க வீரராக இறங்கி ஆச்சரியம் அளித்தார். அவர் துவக்க வீரராக 54 ரன்கள் எடுத்தார், முதல் இன்னிங்க்ஸில் மிடில் ஆர்டரில் சொதப்பிய ரஹானே இரண்டாம் இன்னிங்க்ஸில் துவக்க வீரராக நன்றாக செயல்பட்டார்.

கேப்டன் என்ன சொன்னார்?

கேப்டன் என்ன சொன்னார்?

இந்த நிலையில், கேப்டன் கோலி கூறுகையில், துவக்க வீரராக நாங்கள் இருவரை (மாயங்க் அகர்வால், ராகுல்) மட்டுமே வைத்துள்ளோம். இதற்கு காரணம் அவர்கள் இருவருக்கும் 4 இன்னிங்க்ஸ் ஆட வாய்ப்பு கொடுப்பது தான் என குறிப்பிட்டார்.

யாருக்கு கட்டம்?

யாருக்கு கட்டம்?

மேலும், கூறுகையில், மாயங்க் சிறப்பாக ஆடி வருகிறார். ராகுல் முன்பு நன்றாக ஆடினார். தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் தன்னை நிரூபிக்க வந்துள்ளார் என்றார். இதில் இருந்தே ராகுலைத் தான் கோலி கட்டம் கட்டி உள்ளார் என்பது புரிகிறது.

உதாரணம் சொன்ன கோலி

உதாரணம் சொன்ன கோலி

மேலும், ஹனுமா விஹாரி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துவக்கம் அளித்த போது, பெரிதாக ரன் எடுக்காவிட்டாலும் 85 பந்துகளை சந்தித்தார். அது மற்ற பேட்ஸ்மேன்கள் அழுத்தம் இல்லாமல் ஆட உதவியதாக குறிப்பிட்டு, ராகுல் விரைவாக ஆடி விக்கெட்டை இழக்கக் கூடாது என மறைமுகமாக சுட்டிக் காட்டினார் கேப்டன்.

Story first published: Thursday, August 22, 2019, 12:13 [IST]
Other articles published on Aug 22, 2019
English summary
IND vs WI 2019 : KL Rahul get last chance as an opener in test team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X