For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இம்புட்டு ரன்னா? ஒரே ரெக்கார்டு.. சச்சின், பாண்டிங், டிராவிட்டை அடிச்சு தூக்கிய விராட் கோலி!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் விராட் கோலி.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த அவர் சில சாதனைகளை அடித்து துவம்சம் செய்தார்.

அதில் முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டி பேட்டிங் ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங், சச்சின், டிராவிட் என யாரும் எட்டாத உயரத்தை தொட்டு இருக்கிறார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

பத்து வருடங்களில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் எல்லோரையும் முந்தி 20,000 ரன்கள் குவித்து முதல் இடத்தை பிடித்துள்ளார் கோலி. இரண்டாம் இடத்தில் இருக்கும் பாண்டிங்கை விட அதிக ரன்களை குவித்துள்ளார் கோலி.

சதம் அடித்தார்

சதம் அடித்தார்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கோலி சதம் கடந்தார். இது அவரது 43வது ஒருநாள் போட்டி சதம் ஆகும். இரண்டாம் போட்டியிலும் சதம் அடித்து இருந்த கோலி, இந்தப் போட்டியிலும் சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அசத்தினார்.

ஓவர்கள் குறைப்பு

ஓவர்கள் குறைப்பு

35 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடந்த இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 240 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு டிஎல்எஸ் முறைப்படி 255 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ரோஹித் சர்மா 10, ஷிகர் தவான் 36 ரன்கள் எடுத்தனர். ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார்.

அபார சதம் அடித்த கோலி

அபார சதம் அடித்த கோலி

அணியை வழிநடத்திச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் கோலி. ஸ்ரேயாஸ் சிறப்பாக ஆடி 65 ரன்கள் குவிக்க, மறுபுறம் கோலி 99 பந்துகளில் 114 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

பத்து ஆண்டுகளில்..

பத்து ஆண்டுகளில்..

சதம் அடித்த கோலி, 2011 முதல் தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்துள்ளார். 2010க்கு முன் ஒருநாள் போட்டிகளில் 484 ரன்கள் குவித்துள்ளார் கோலி. மொத்தமாக சர்வதேச அரங்கில் 20,5௦2 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2010க்கு பின் மட்டும் 20,018 ரன்கள் எடுத்துள்ளார்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். 2001 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் பாண்டிங் - 18,962 ரன்கள், ஜெயவர்தனே - 16,304 ரன்கள், சங்ககாரா - 15,999 ரன்கள், சச்சின் - 15,962 ரன்கள், டிராவிட் - 15,853 ரன்கள் குவித்துள்ளனர்.

சாதனை நாயகன்

சாதனை நாயகன்

இவர்கள் அனைவரையும் விட அதிக ரன்கள் குவித்துள்ள கோலி 20,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டி இருக்கிறார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் கோலி.

Story first published: Thursday, August 15, 2019, 16:35 [IST]
Other articles published on Aug 15, 2019
English summary
IND vs WI 2019 : Kohli reaches 20,000 runs in a decade breaches Ricky Ponting record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X