For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உண்மையாகவே கிங் கோலி தான்.. இனி அடிச்சுக்க ஆளே கிடையாது.. கங்குலி, தோனி ரெக்கார்டு துவம்சம்!

Recommended Video

IND vs WI 2019 : Kohli surpasses Ganguly’s overseas test victory record

ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்த வெற்றியுடன் கேப்டன் கோலி இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்ற உச்சத்தை எட்டி உள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி கேப்டன்களில் கங்குலியின் முக்கிய சாதனை ஒன்றை அடித்து நொறுக்கிய கோலி, தோனியின் டெஸ்ட் வெற்றிகளை சமன் செய்துள்ளார்.

இந்திய டெஸ்ட் போட்டி கேப்டன்களில் சிறந்த கேப்டன் என்ற பெயரை பெற்றுள்ளார் கோலி. இந்திய அணியும் முதல் டெஸ்ட் வெற்றியின் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ரஹானே முதல் இன்னிங்க்ஸில் 81 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 102 ரன்களும் அடித்தார். இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சேர்த்து பும்ரா 6 விக்கெட்களும், இஷாந்த் சர்மா 8 விக்கெட்களும் வீழ்த்தினர்.

கேப்டன் கோலி சாதனை

கேப்டன் கோலி சாதனை

இந்த வெற்றியின் மூலம் கேப்டனாக விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய டெஸ்ட் போட்டி கேப்டன்களில் அதிக வெற்றி பெற்றவர்கள் வரிசையில் தோனிக்கு நிகராக முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அடுத்த இடங்கள் யார்?

அடுத்த இடங்கள் யார்?

தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகளும், கோலி 47 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகளும் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்தப் பட்டியலில் அடுத்த இடங்களில் இருக்கும் கங்குலி 49 போட்டிகளில் 21 வெற்றிகளும், அசாருதீன் 47 போட்டிகளில் 14 வெற்றிகளும் பெற்றுள்ளனர்.

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள்

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள்

முக்கியமான சாதனையாக வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார் கோலி. கோலி 26 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 12 வெற்றிகள் பெற்றுள்ளார்.

மற்றவர்கள் எத்தனை வெற்றிகள்?

மற்றவர்கள் எத்தனை வெற்றிகள்?

இதே பட்டியலில் கங்குலி 28 போட்டிகளில் 11 வெற்றிகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். தோனி 30 வெளிநாட்டு டெஸ்ட்களில் வெறும் 6 வெற்றிகள் தான் பெற்றுள்ளார்.

சிறந்த கேப்டன் கோலி தான்

சிறந்த கேப்டன் கோலி தான்

இந்த சாதனைகள் மூலம் இந்திய கேப்டன்களிலேயே சிறந்த டெஸ்ட் கேப்டன் என நிரூபித்து இருக்கிறார் கேப்டன் கோலி. அவ்வபோது கோலியின் கேப்டன்சி பற்றி வரும் விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துள்ளது இந்த சாதனை!

Story first published: Monday, August 26, 2019, 12:37 [IST]
Other articles published on Aug 26, 2019
English summary
IND vs WI 2019 : Kohli surpasses Ganguly’s overseas test victory record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X