For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷமிக்கு விசா கொடுக்க முடியாது.. மறுத்த அமெரிக்கா.. கடிதம் எழுதிய பிசிசிஐ.. கசிந்த அதிர்ச்சித் தகவல்!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அமெரிக்க தூதரகம் விசா கொடுக்க மறுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பிசிசிஐ இந்த விவகாரத்தில் தலையிட்டு அவருக்கு உதவி செய்ய முயன்றதும் தெரிய வந்துள்ளது.

இந்தியா அடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆட உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வயசு 27 தான் ஆகுது... அதுக்குள்ள இந்த முடிவை எடுத்த பாக். இளம் வீரர்...! ரசிகர்கள் அதிர்ச்சி வயசு 27 தான் ஆகுது... அதுக்குள்ள இந்த முடிவை எடுத்த பாக். இளம் வீரர்...! ரசிகர்கள் அதிர்ச்சி

சர்ச்சை

சர்ச்சை

ஷமி என்றாலே சர்ச்சை என்ற அளவிற்கு ஆகி விட்டது. ஷமிக்கும், அவர் மனைவிக்கும் இடையே இருந்த மோதல் காரணமாக அவர் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க, அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக ரசிகர்களே புகார் கூறும் அளவுக்கு தான் நிலைமை இருக்கிறது. உலகக்கோப்பை அரையிறுதியில் அவருக்கு களமிறங்க வாய்ப்பு அளிக்காததும் சர்ச்சை ஆனது.

ஷமிக்கு விசா மறுப்பு

ஷமிக்கு விசா மறுப்பு

இந்த சூழலில், அமெரிக்க தூதரகம் ஷமிக்கு விசா கொடுக்க மறுத்து இருக்கிறது. ஷமி மீது அவரது மனைவி ஹாசின் ஜாஹன் காவல்துறையில் கொடுத்த ஒரு புகார் தான் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.

வழக்கு சிக்கல்

வழக்கு சிக்கல்

ஷமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்த அவர் மனைவி, ஷமி தன்னை துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்து இருந்தார். அது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. அந்த வழக்கு தொடர்பான தகவல்கள் அமெரிக்க தூதரகத்திற்கு முழுமையாக கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

இது குறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், முதலில் ஷமி விசா நிராகரிக்கப்பட்டது. காவல்துறை அறிக்கை முழுமையாக இல்லை. இப்போது அந்த சிக்கல் நீங்கி விட்டது. அவர்களுக்கு தேவையான அறிக்கைகளை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றார்.

பிசிசிஐ கடிதம்

பிசிசிஐ கடிதம்

விசா அத்தனை எளிதாக கிடைத்து விடவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந்திய வீரர்களுக்கு எடுக்கப்படும் அமெரிக்க விசா பி1 எனப்படும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் என்ற பிரிவில் வருகிறது. அதை வைத்து ஷமியின் சாதனைகளை பட்டியலிட்டு, அவர் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றவர் என்பதை கூறி பிசிசிஐ கடிதம் எழுதிய பின்னரே அவருக்கு விசா கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் டி20 தொடர்

அமெரிக்காவில் டி20 தொடர்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் ஒரு பகுதி அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டி20 அணியில் ஷமியின் பெயர் இல்லை என்றாலும், அவரும் அமெரிக்கா செல்கிறார் என தெரிகிறது. வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற உள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஷமி விளையாட உள்ளார்.

Story first published: Saturday, July 27, 2019, 9:32 [IST]
Other articles published on Jul 27, 2019
English summary
IND vs WI 2019 : Mohammed Shami Visa rejected because of Police case
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X